செய்திகள் மலேசியா
ரியாத்தில் நடந்த தாக்குதலில் மலேசியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: விஸ்மா புத்ரா
புத்ராஜெயா:
சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நடந்த தாக்குதலில் மலேசியர்கள் யாரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை என விஸ்மா புத்ரா உறுதி செய்துள்ளது.
விமான நிலையத்தில் தற்காலிகமாக செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பயணம் செய்து சிக்கித் தவிக்கும் பல மலேசியர்களுக்குத் தூதரக உதவிகளை வழங்குவதற்காக, ரியாத்தில் உள்ள மலேசியத் தூதரகம் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாக விஸ்மா புத்ரா கூறியது.
சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்தும், தம்மாமில் உள்ள கிங் ஃபத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஒரு எறிபொருள் விழுந்ததாக வந்த தகவல்களைத் தொடர்ந்தும், வெளியுறவு அமைச்சகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று அது ஒரு அறிக்கையில் கூறியது.
அதே நேரத்தில், சவூதி அரேபியாவில் வசிக்கும், அங்கு பயணம் செய்யும் அல்லது பயணம் செய்யத் திட்டமிடும் மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறு விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது.
விமானப் போக்குவரத்து இடையூறுகள் இன்னும் தொடர்வதால், எதிர்காலத்தில் பயணத் திட்டங்களைக் கொண்டவர்கள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு விமான நிறுவனத்திடம் நேரடியாக விமானத்தின் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என விஸ்மா புத்ரா கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 11, 2026, 2:17 pm
தேசிய சேமிப்பு மக்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டது: பிரதமர்
October 11, 2026, 10:23 am
சிலாங்கூர் மாநில அரசு சார்பில் 576 இந்திய மாணவர்களுக்கு 1,546,515 ரிங்கிட் கல்வி நிதியுதவி
October 11, 2026, 9:39 am
பிற மதங்களின் வழிபாட்டு சடங்குகளைச் செய்யும் ஒரு முஸ்லிமின் வைரல் பதிவு குறித்து ஜாய்ஸ் விசாரணை
October 11, 2026, 9:34 am
நெகிரி செம்பிலான் மந்திரி புசாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படக்கூடாது: ஜாஹித்
October 11, 2026, 9:13 am
