செய்திகள் மலேசியா
தேசிய சேமிப்பு மக்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டது: பிரதமர்
கோலாலம்பூர்:
2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், விவேகமான நிதி நிர்வாகத்தில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும்.
இதன் மூலம் வருவாயை மக்களுக்குத் திருப்பி அளித்து, வாழ்க்கைச் செலவு மீதான அழுத்தத்தைக் குறைக்க முடியும், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குழுவினருக்கு இது பொருந்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மேம்படுத்தப்பட்ட நிர்வாகம், கசிவுகளைத் தடுப்பதற்கான முயற்சிகள் மூலம் கிடைக்கும் சேமிப்புகள், தேவைப்படும் குழுக்களுக்கான உதவியைப் பாதிக்காமல், நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்தும் தேவைக்கு ஏற்ப மக்களுக்குத் திருப்பி அளிக்கப்படும்.
மலேசியாவின் பணவீக்க விகிதம் சுமார் இரண்டு சதவீதமாக இருந்தாலும், இது உலகின் மிகக் குறைந்த விகிதங்களில் ஒன்றாகும், சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வைத் தொடர்ந்து வாழ்க்கைச் செலவு மீதான அழுத்தம் மக்களால் இன்னும் உணரப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதை ஏன் செய்ய முடியவில்லை என்று மக்கள் கேட்கும்போது? நாம் முதலில் பல விஷயங்களைத் தீர்க்க வேண்டும்.
நாம் கடனைக் கையாள வேண்டும், சேமிக்க வேண்டும. முன்னுரிமைகளைத் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் இன்று இரவு ஆர்டிஎம் ஒளிபரப்பிய மடானி 2027 பட்ஜெட் அறிக்கை குறித்த ஒரு சிறப்பு நேர்காணலில் கூறினார்.
கடனைக் குறைப்பது, செலவினங்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றுக்கும், பாதுகாப்பு, இராணுவ, போலிஸ் பணியாளர்களுக்கான வீட்டுவசதி, பள்ளிக் கல்வி வசதிகள் போன்ற முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதற்கும் இடையே அரசாங்கம் சமநிலைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 11, 2026, 2:18 pm
ரியாத்தில் நடந்த தாக்குதலில் மலேசியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: விஸ்மா புத்ரா
October 11, 2026, 10:23 am
சிலாங்கூர் மாநில அரசு சார்பில் 576 இந்திய மாணவர்களுக்கு 1,546,515 ரிங்கிட் கல்வி நிதியுதவி
October 11, 2026, 9:39 am
பிற மதங்களின் வழிபாட்டு சடங்குகளைச் செய்யும் ஒரு முஸ்லிமின் வைரல் பதிவு குறித்து ஜாய்ஸ் விசாரணை
October 11, 2026, 9:34 am
நெகிரி செம்பிலான் மந்திரி புசாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படக்கூடாது: ஜாஹித்
October 11, 2026, 9:13 am
