செய்திகள் மலேசியா
புகைமூட்டம்: ஜொகூர் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மேலும் 5 நாட்களுக்கு மூடப்படுகிறது
ஜொகூர்பாரு:
புகைமூட்டம், மோசமடைந்து வரும் காற்றின் தரம் காரணமாக, ஜொகூரில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்வி நிறுவனங்களும் மேலும் ஐந்து நாட்களுக்கு மூடப்பட்டுகின்றன.
தற்போதைய காற்று மாசுபாட்டின் போக்கு, அத்துடன் குழந்தைகள், கல்விப் பணியாளர்களிடையே சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட பிறகு, பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கான மூடல் காலத்தை அக்டோபர் 12 முதல் அக்டோபர் 16 வரை நீட்டிப்பதாக ஜொகூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையின் மதிப்பீட்டின் அடிப்படையில் பல முக்கிய காரணிகளைக் கருத்தில் கொண்டு, மூடல் காலத்தை நீட்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று ஜொகூர் கல்வி, தகவல் செயற்குழு உறுப்பினர் நாகிப் கசாலி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சுகாதார அபாயங்களைத் தவிர, குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமின்றி சுமார் 170 முதல் 180 வரை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள காற்று மாசுபடுத்தல் குறியீட்டு அளவுகளையும் மாநில அரசு கணக்கில் எடுத்துக்கொள்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திப ன்நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 11, 2026, 10:23 am
சிலாங்கூர் மாநில அரசு சார்பில் 576 இந்திய மாணவர்களுக்கு 1,546,515 ரிங்கிட் கல்வி நிதியுதவி
October 11, 2026, 9:39 am
பிற மதங்களின் வழிபாட்டு சடங்குகளைச் செய்யும் ஒரு முஸ்லிமின் வைரல் பதிவு குறித்து ஜாய்ஸ் விசாரணை
October 11, 2026, 9:34 am
நெகிரி செம்பிலான் மந்திரி புசாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படக்கூடாது: ஜாஹித்
October 10, 2026, 4:24 pm
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வாரா?
October 10, 2026, 4:23 pm
