நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மந்திரி புசாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படக்கூடாது: ஜாஹித்

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அவருக்கு எதிராக எந்த நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டுவரப்படக்கூடாது.

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை வலியுறுத்தினார்.

இதுவரை அத்தகைய ஒரு நடவடிக்கை குறித்து தான் கேள்விப்பட்டதில்லை.

அது உண்மையாக இருந்தால், அது நடக்காமல் இருப்பதை நான் உறுதி செய்வேன் என்று அவர் கூறினார்.

நெகிரி செம்பிலான் அம்னோ தீர்மானத்தை சமர்ப்பிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ஒரு ஆதாரம் கூறியதாக வெளியான அறிக்கை குறித்து ஜாஹித் கருத்துத் தெரிவித்தார்.

அந்த ஆதாரத்தின்படி, இந்தத் தீர்மானம் நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் ஜலாலுடின் அலியாஸால் சமர்ப்பிக்கப்படும்.

ஆனால் அது மத்திய அம்னோ தலைமையின் முடிவுக்கு உட்பட்டதாக இருக்கும்.

இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால், மாநில ஆட்சிக் குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் பட்டியல் அறிவிக்கப்படலாம் என்றும் அந்த ஆதாரம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset