நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிற மதங்களின் வழிபாட்டு சடங்குகளைச் செய்யும் ஒரு முஸ்லிமின் வைரல் பதிவு குறித்து ஜாய்ஸ் விசாரணை

ஷாஆலம்:

இஸ்லாமிய சட்டத்திற்கு முரணான பிற மதங்களின் வழிபாட்டு சடங்குகளைச் செய்யும் ஒரு முஸ்லிமின் செயல்கள் குறித்த வைரல் பதிவு பற்றி சிலாங்கூர் இஸ்லாமிய மத விவகாரங்கள் துறை (ஜாய்ஸ்) விசாரணை நடத்தி வருகிறது.

இஸ்லாமிய சட்டத்தை மீறும் வகையிலும், இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையிலும் வழிபாடுகளைக் காட்டும் செயல்களை உள்ளடக்கிய, 1995 ஆம் ஆண்டின் ஷரியா குற்றங்கள் சட்டத்தின் (சிலாங்கூர்), 10 பிரிவுகளின் கீழ் தனது துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அதன் இயக்குநர் டத்தோ முகமது ஷாஜிஹான் அகமது கூறினார்.

செய்திகளில் வெளியானதைப் போல, சிலாங்கூரில் உள்ள பத்துமலையில் நடந்த தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது அந்த நபர் இந்தச் செயலைச் செய்தார் என்பதை இதுவரை ஜாயஸ்சால் உறுதிப்படுத்த முடியவில்லை.

மேலும், அந்தப் பதிவில் மேலதிகத் திருத்தம் அல்லது செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூற்றையும் நாங்கள் நிராகரிக்கவில்லை.


இது தொடர்பாக, சம்பவம் நடந்த இடம் உட்பட இந்த வழக்கின் பல்வேறு விவரங்கள் தனது துறையால் மேலும் முழுமையாகவும் உடனடியாகவும் விசாரிக்கப்படும் என்று முஹம்மது ஷாஜிஹான் கூறினார்.

நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு ஜாய்ஸ்-இன் அதிகார வரம்பை அடையாளம் காண்பதே இதன் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset