நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்ஜெட் 2027: முதல்முறை வீடு வாங்குபவர்களுக்கு முத்திரை வரி விலக்கு உட்பட பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கும்: டத்தோ அப்துல் ஹமித்

கோலாலம்பூர்:

பட்ஜெட் 2027இல் முதல்முறை வீடு வாங்குபவர்களுக்கு முத்திரை வரி (Stamp Duty) விலக்கு உட்பட பல்வேறு திட்டங்கள்
மக்களுக்கு பயனளிக்கும்.

மிம்கோய்ன் தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமித் இதனை கூறினார்.


2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் தாக்கல் செய்தார்.

இதில் மக்கள் பயனடையும் பல்வேறு திட்டங்களை பிரதமர் அறிவித்தார்.

குறிப்பாக 500,000 ரிங்கிட் வரை விலை கொண்ட வீடுகளுக்கான கடன் ஒப்பந்தங்கள், சொத்து உரிமை மாற்ற ஆவணங்கள் ஆகியவற்றின் மீதான முத்திரை வரியிலிருந்து முதல்முறை வீடு வாங்குபவர்களுக்கு முழு விலக்கு அளிக்கப்படும்.

750,000 ரிங்கிட் வரை விலை கொண்ட வீடுகளுக்கும் இந்த விலக்கு பொருந்தும் என்றும், அதன்படி வீட்டின் விலையில் முதல் 500,000 ரிங்கிட் தொகைக்கு முழு விலக்கும், மீதமுள்ள தொகைக்கு 50% விலக்கும் வழங்கப்படும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்பு முதல் முறையாக வீடு வாங்குபவர்களின் சுமையை குறைக்கும்.

இதை தவிர்த்து இந்திய சமுதாயத்திற்கான தெக்குன், அமானா இக்தியார் நிதி 150 மில்லியன் ரிங்கிட்டாக பிரதமர் உயர்த்தியுள்ளார்.

மேலும் இந்திய சமுதாயத்திற்காக மித்ரா நிதியும் 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியுள்ளார்.

இதுபோன்ற திட்டங்கள் சமுதாயத்திற்கு பெரும் பயனாக இருக்கும் என்று டத்தோ அப்துல் ஹமித் கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset