செய்திகள் மலேசியா
சிலாங்கூர் நலன், மனிதவள மேம்பாட்டு அமைப்பின் 19ஆம் ஆண்டு விழாவில் நோயால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு நிதியுதவி: சுகுமாறன்
சுங்கைவே:
சிலாங்கூர் நலன், மனிதவள மேம்பாட்டு அமைப்பின் 19ஆம் ஆண்டு விழாவில் நோயால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது என்று அதன் தலைவர் சுகுமாறன் கூறினார்.
சிலாங்கூர் நலன், மனிதவள மேம்பாட்டு அமைப்பின் 19ஆம் ஆண்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் 1,200 பேர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் டான்ஸ்ரீ சுப்பிரமணியம் இவ்விழாவிற்கு தலைமையேற்றார்.
அதே வேளையில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட்டின் சிறப்பு செயலாளர் டத்தோஸ்ரீ மெகாட் ஜூல்கர்னாய்ன் உட்பட பல பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டார்.
அமைப்பின் அதிகமான இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அவர்களை ஒன்றுப்படுத்தும் நோக்கில் அவர்களிடையே உறவை வலுப்படுத்தும் நோக்கிலும் இவ்விழா நடைபெற்றது.
இவ்விழா வெற்றி பெற உதவிய அனைத்து நல்லுள்ளங்களும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இவ்விழாவில் முக்கிய அங்கமாக கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட ஐந்து பேருக்கு மருத்துவச் செலவுகளுக்காக தலா 2,000 வெள்ளி வழங்கப்பட்டது.
இதன் மூலம் அவர்களின் மருத்துவத் தேவைகளுக்கு உதவ முடிந்தது என்று சுகுமாறன் கூறினார்.
கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குவது தான் சிலாங்கூர் நலன், மனிதவள மேம்பாட்டு அமைப்பின் முக்கிய திட்டமாக உள்ளது.
இதுவரை 860 மடிக்கணினிகளை மாணவர்களுக்கு நாங்கள் வழங்கியுள்ளோம்.
அடுத்தாண்டு இந்த எண்ணிக்கையை 1,000மாக உயர்த்துவது தான் எங்களுடைய இலக்காகும்.
இதனை இலக்காக கொண்டே அமைப்பு செயல்பட்டு வருகிறது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 11, 2026, 2:18 pm
ரியாத்தில் நடந்த தாக்குதலில் மலேசியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: விஸ்மா புத்ரா
October 11, 2026, 2:17 pm
தேசிய சேமிப்பு மக்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டது: பிரதமர்
October 11, 2026, 10:23 am
சிலாங்கூர் மாநில அரசு சார்பில் 576 இந்திய மாணவர்களுக்கு 1,546,515 ரிங்கிட் கல்வி நிதியுதவி
October 11, 2026, 9:39 am
பிற மதங்களின் வழிபாட்டு சடங்குகளைச் செய்யும் ஒரு முஸ்லிமின் வைரல் பதிவு குறித்து ஜாய்ஸ் விசாரணை
October 11, 2026, 9:34 am
நெகிரி செம்பிலான் மந்திரி புசாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படக்கூடாது: ஜாஹித்
October 11, 2026, 9:13 am
