நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைநகரில் தங்க வணிக கண்காட்சி; மலேசிய இந்திய பொற்கொல்லர், நகை வியாபாரிகள் சங்கம் அனைத்துலக ரீதியில் பயணிக்கும்: டத்தோ அப்துல் ரசூல்

கோலாலம்பூர்:

மலேசிய இந்திய பொற்கொல்லர், நகை வியாபாரிகள் சங்கம் அனைத்துலக ரீதியில் பயணிக்கவுள்ளது.

மலேசிய இந்திய பொற்கொல்லர், நகை வணிகர் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல் இதனை கூறினார்.

மிட்ஜா, Jewel Trendz International இணைந்து தங்க வணிக கண்காட்சி ஏற்பாடு செய்துள்ளோம்.

இக்கண்காட்சி இன்றும் நாளையும் தலைநகர் ரெனசன் ஹோட்டலில் நடைபெறுகிறது.

மலேசியாவைத் தவிர்த்து அனைத்துலக நீதியில் இருந்து தங்க, வைர வணிகர்களும் இங்கு ஒன்றுக் கூடி உள்ளனர்.

குறிப்பாக மலேசிய வணிகர்கள் அனைத்துலக வணிகர்களுடன் இடையில் நல்லதொரு உறவு ஏற்படுகிறது.

அதே வேளையில் தங்க பரிமாற்றமும் இங்கு ஏற்படுகிறது என்று அவர் கூறினார்.

இவ்விழாவில் முக்கிய அங்கமாக மிட்ஜா, Jewel Trendz International ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் Jewel Trendz International அனைத்துலக ரீதியில் மேற்கொள்ளும் விழாக்களில் மிட்ஜாவும் இடம் பெறும்.

இது தங்க வணிக வியாபாரிகளுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று அவர் கூறினார்.

முன்னதாக 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார்.

இதில் இந்திய வணிகர்களுக்காக தெக்குன், அமானா இக்தியார் நிதியை 150 மில்லியன் ரிங்கிட் வரை உயர்த்தியுள்ளார்.

இதே போன்று இந்தியர்களுக்காக பல திட்டங்களையும் அவர் அறிவித்துள்ளார்.

இத்திட்டங்கள் அனைத்தும் சமுதாயத்திற்கு பெரும் பயனாக இருக்கும் என டத்தோ அப்துல் ரசூல் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset