செய்திகள் மலேசியா
தீபாவளி தமிழர்களின் பண்டிகை; DIWALI என்பது சரியான சொல் அல்ல, DEEPAVALI என்பதே சரியானது: டத்தோஸ்ரீ சரவணன் காட்டம்
கோலாலம்பூர்:
DIWALI என்பது சரியான சொல் அல்ல என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் சாடினார்.
தீபாவளியை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸில் சிறப்பு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கடைகளுக்கான அலங்கார வளைவுகள், பதாகைகளில் DIWALI என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அது தவறாகும். அங்கு பயன்படுத்தப்பட வேண்டிய சரியான சொல் DEEPAVALI ஆகும்.
இவ்விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் டத்தோஸ்ரீ சரவணன் கூறியிருப்பதாவது,
மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தினரில் பெரும்பான்மையானோர் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். தமிழ் பேசுபவர்கள்.
எனவே, DEEPAVALI என்ற சொல் பெரும்பான்மை சமூகத்தினரின் கலாச்சாரப் பின்னணி, மொழிக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது.
அதே வேளையில் DIWALI என்ற சொல், இந்தி பேசும் வட இந்திய சமூகத்தினரால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும்.
குறிப்பாக மலேசியாவில் தீபாவளி பண்டிகை DEEPAVALI என்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆகவே இந்த நாட்டில் தீபாவளியை கொண்டாடும் பெரும்பான்மை இந்து சமூகத்தினரின் பழக்கவழக்கங்களையும் கலாச்சாரத்தையும் மதிக்கும் வகையில், தாங்கள் DIWALI என்ற சொல்லின் பயன்பாட்டை DEEPAVALI என்று மாற்ற வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் உடனடியாக எடுக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் அக்கடிதத்தில் குறிப்பிட்டார்.
இதனிடையே இப்பதாகைகளை அமைச்சு அடுத்த மூன்று நாட்களில் மாற்ற வேண்டும்.
இல்லையென்றல் கூட்டரசுப் பிரதேச மஇகா சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 10, 2026, 4:24 pm
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வாரா?
October 10, 2026, 4:23 pm
புகைமூட்டம்: எந்தப் பகுதியிலும் ஆரோக்கியமான காற்று மாசுபாடு குறியீட்டு அளவு பதிவாகவில்லை
October 10, 2026, 4:05 pm
லயோலா கல்லூரியில் படித்ததில் பெருமை கொள்கிறேன்: சுப்ரீம் ஸ்டார் ஆர்.சரத்குமார் பெருமிதம்
October 10, 2026, 1:35 pm
யாரும் கண்காணிக்காதபோதும் சரியானதைச் செய்வதே நேர்மை: டத்தோ வீரா ஷாகுல்
October 10, 2026, 10:13 am
