நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவிற்கு 150 மில்லியன் ரிங்கிட்; குறைந்தபட்ச ஊதியம் 2,000ஆக உயர்வால் 40 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

ஜூன் 2027 முதல் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 2000ஆக உயர்த்தப்படுவதன் மூலம், 40 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்  ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.

தற்போதைய குறைந்தபட்ச ஊதியமான 1,700 ரிங்கிட்டில் இருந்து 300 ரிங்கிட்டாக உயர்வு என்பது, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் வருமானத்தை அதிகரித்தல், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும்.

மேலும் அதிக திறன் கொண்ட பணியாளர் தொகுப்பை உருவாக்குதல் ஆகிய அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

இது தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்துவது மற்றும் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பானது.

ஆண்டுக்கு 50 மில்லியன் ரிங்கிட்டுக்கும் குறைவான விற்பனை கொண்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், தங்கள் வணிக மாதிரிகளை மாற்றியமைக்க அவகாசம் அளிக்கும் வகையில் இந்த ஊதிய உயர்விலிருந்து விலக்களிக்கப்படும்.

அரை-திறன் கொண்ட பணியாளர்கள், பட்டதாரிகளுக்கு மாதத்திற்கு 2,500 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் புதிய வருமானக் கட்டமைப்பை அரசாங்கம் அறிமுகப்படுத்தும்.

அரசாங்கத்துடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள், அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள், தங்கள் 'வாழ்க்கைக்கான ஊதிய'  அளவுகோலை மாதத்திற்கு 3,100 ரிங்கிட்டில் இருந்து 3,400 ரிங்கிட்டாக உயர்த்த ஒப்புக்கொண்டுள்ளன.

இதன் மூலம் 230,000 தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.

'கிக்' பொருளாதாரத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள், பி-ஹெய்லிங் விநியோக ஓட்டுநர்களுக்கு ஆதரவளிக்க, 2027-இல் 160 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அரசாங்கம்,  'Grab' நிறுவனத்தின் கூட்டு நிதியுதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

இத்திட்டம் குறைந்தபட்ச வருவாய், வாகனப் பராமரிப்பு, காப்பீடு சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கான பங்களிப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

குறைந்தபட்ச வருவாய் விகிதங்கள், வருமானக் கணக்கீட்டு முறைகள், சமூகப் பாதுகாப்புத் தரநிலைகள் குறித்து 'கிக் ஆலோசனை மன்றம்' பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதற்கான ஏற்பாடுகள் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறுதி செய்யப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

பங்களிப்புகள் கட்டாயமாக்கப்படாத 17 துறைகளைச் சேர்ந்த 200,000-க்கும் மேற்பட்ட சுயதொழில் செய்பவர்களுக்கு 70 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இ-ஹெய்லிங், பி-ஹெய்லிங் தொழிலாளர்களும், ஆண்டுக்கு 300 ரிங்கிட் வரை ஊழியர் சேமநல நிதிக்கான இணையான பங்களிப்பைப் பெறத் தகுதி பெறுவார்கள்.

பாரம்பரிய வேலைவாய்ப்பையும் தாண்டி சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை இந்த நடவடிக்கைகள் பிரதிபலிக்கின்றன என்று ரமணன் கூறினார்.
திறன் மேம்பாட்டைப் பொறுத்தவரை, அமைச்சகங்கள் முழுவதும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி, பயிற்சிக்காக 8 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்று மில்லியன் பயிற்சி வாய்ப்புகளுக்கு ஆதரவளிக்க HRD Corp 3 பில்லியன்  ரிங்கிட் வரி நிதியைப் பயன்படுத்தும்.

அதே நேரத்தில் முதியோர் பராமரிப்புத் துறையில் வேலைகளுக்காக 8,000 மலேசியர்களுக்குப் பயிற்சி அளிக்க 40 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்படும்.

எதிர்கால வேலைகளுக்கு மலேசியர்களைத் தயார்படுத்துவதற்கு இந்த முதலீடுகள் அவசியமானவை.

திறமையான, சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் மற்றும் புதிய வாய்ப்புகளை ஏற்கத் தயாராக இருக்கும் ஒரு தொழிலாளர் படை நமக்குத் தேவை என்று அவர் கூறினார்.

மித்ரா ஒதுக்கீடும் 100 மில்லியனிலிருந்து 150 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும்.

இதில், திறன் பயிற்சி, தொழில்துறை தன்னியக்கம், தொழில்நுட்பம் மற்றும் விமானப் பராமரிப்பு ஆகியவற்றில் உள்ள வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset