நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகைமூட்டம்: எந்தப் பகுதியிலும் ஆரோக்கியமான காற்று மாசுபாடு குறியீட்டு அளவு பதிவாகவில்லை

கோலாலம்பூர்:

இன்று காலை பதிவான காற்று மாசுபாடு குறியீட்டு (API) அளவுகளுடன் ஒப்பிடுகையில், பெரும்பாலான பகுதிகளில் அவை ஏறக்குறைய அதே அளவில் பதிவாகியுள்ளதால், தேசிய புகைமூட்ட நிலைமையில் சாதகமான முன்னேற்றங்கள் எதுவும் தென்படவில்லை.

இன்று மாலை நிலவரப்படி, சுற்றுச்சூழல் துறையின் மலேசிய காற்று மாசுபடுத்தி குறியீட்டு மேலாண்மை அமைப்பு இணையதளம், நாடு முழுவதும் எந்தப் பகுதியிலும் ஏபிஐ அளவுகள் ஆரோக்கியமான அளவில் பதிவாகவில்லை என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

மேலும், 33 பகுதிகள் ஆரோக்கியமற்ற ஏபிஐ அளவுகள் கொண்ட பகுதிகளாகவும், மற்ற 35 பகுதிகள் மிதமான அளவுகள் கொண்ட பகுதிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், மிகவும் ஆரோக்கியமற்ற மற்றும் அபாயகரமான அளவுகள் எந்தப் பகுதியிலும் பதிவாகவில்லை.

புகை மூட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான ஜொகூர் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset