செய்திகள் மலேசியா
எம்40 பிரிவினரின் சுமையைக் குறைப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒரு சான்றாகும்: ஜாஹித்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, நடுத்தர வருமானக் குழுவினர் (எம்40) உட்பட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.
அதிகப்படியான செலவினங்களால் அழுத்தத்தைச் சந்தித்து வரும் எம்40 பிரிவினரின் நிதிச் சுமையைக் குறைக்க, இந்த நிதிநிலை அறிக்கை மூலம் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.
இதுவரை, அதிகப்படியான வருமானம் மற்றும் வாங்கும் சக்தி ஆகியவற்றின் அடிப்படையில், அவர்கள் (எம்40 பிரிவினர்) அதிகப்படியான செலவினங்களால் மிகவும் மன அழுத்தத்தில் இருந்து வருகின்றனர்.
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் 2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, 2010ஆம் ஆண்டு முதல் திருத்தப்படாமல் இருந்த தனிநபர் வரிச் சலுகை வரம்பு, 9,000 ரிங்கிட்டில் இருந்து 12,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்.
இதன் மூலம் எம்40 குழுவினர் பயனடைவார்கள் என்றும் பிரதமர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 10, 2026, 1:35 pm
யாரும் கண்காணிக்காதபோதும் சரியானதைச் செய்வதே நேர்மை: டத்தோ வீரா ஷாகுல்
October 10, 2026, 10:13 am
சுங்கைபூலோவில் சந்தேக நபரைத் துரத்தியபோது போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்
October 10, 2026, 10:11 am
ஷாஆலத்தில் 11 வாகனங்கள் மீது மோதிய லோரி ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது பரிசோதனையில் உறுதி
October 10, 2026, 12:02 am
ONDRA RENDA -25 YEARS OF GVM இசைநிகழ்ச்சிக்காக 4,800 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
October 9, 2026, 9:12 pm
முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களைப் பராமரிக்க 80 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: பிரதமர்
October 9, 2026, 9:05 pm
பட்ஜெட் 2027; மித்ராவிற்கான ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும்: பிரதமர் அன்வார்
October 9, 2026, 4:31 pm
சாரா எஸ்டிஆர் உதவிக்கான ஒதுக்கீடு 1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிப்பு: பிரதமர்
October 9, 2026, 4:30 pm
