செய்திகள் மலேசியா
சுங்கைபூலோவில் சந்தேக நபரைத் துரத்தியபோது போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்
சுங்கைபூலோ:
சுங்கைபூலோவில் சந்தேக நபரைத் துரத்தியபோது போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் ஷம்சுடின் மாமாட் இதனை கூறினார்.
நேற்று, பெர்சியாரன் மஹோகனியிலிருந்து சுங்கை பூலோ நோக்கி போலிஸ் ரோந்து வாகனம் துரத்தியது.
அப்போது 30 வயது மதிக்கத்தக்க உள்ளூர்வாசி ஒருவர் ஆக்ரோஷமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனத்தை ஓட்டிச் சென்றதால், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.
மாலை சுமார் 6.42 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், கைது செய்யப்படுவதற்கு முன்பு சந்தேக நபர் ஒரு பொது வாகனத்தின் மீதும் மோதியதாக நம்பப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் ரோந்துப் பணியாளரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தின்போது பஇசாரால் சுடப்பட்டதில் சந்தேக நபர் காயமடைந்தார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஆரம்பகட்ட சோதனையில் சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருள், கைத்துப்பாக்கி போன்ற ஒரு பொம்மைத் துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டது.
சந்தேக நபர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு சிறுநீர் பரிசோதனை நடத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 10, 2026, 1:35 pm
யாரும் கண்காணிக்காதபோதும் சரியானதைச் செய்வதே நேர்மை: டத்தோ வீரா ஷாகுல்
October 10, 2026, 10:11 am
ஷாஆலத்தில் 11 வாகனங்கள் மீது மோதிய லோரி ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது பரிசோதனையில் உறுதி
October 10, 2026, 12:02 am
ONDRA RENDA -25 YEARS OF GVM இசைநிகழ்ச்சிக்காக 4,800 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
October 9, 2026, 9:12 pm
முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களைப் பராமரிக்க 80 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: பிரதமர்
October 9, 2026, 9:05 pm
பட்ஜெட் 2027; மித்ராவிற்கான ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும்: பிரதமர் அன்வார்
October 9, 2026, 4:31 pm
சாரா எஸ்டிஆர் உதவிக்கான ஒதுக்கீடு 1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிப்பு: பிரதமர்
October 9, 2026, 4:30 pm
