நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லயோலா கல்லூரியில் படித்ததில் பெருமை கொள்கிறேன்: சுப்ரீம் ஸ்டார் ஆர்.சரத்குமார் பெருமிதம்

கோலாலம்பூர்: 

லயோலா கல்லூரியில் 1972ஆம் ஆண்டில் இணைந்தேன். தொடர்ந்து அதனுடன் பயணித்து கொண்டிருக்கிறேன்.

லயோலாவில் படித்ததில் பெருமை கொள்வதாக லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர் R.சரத்குமார் பெருமிதம் கொண்டார். 

சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக வலம் வந்து எவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு லயோலாவும் ஒரு முக்கிய அங்கமாகும். 

லயோலா கல்லூரி எனக்கு கட்டொழுங்கைச் சொல்லி கொடுத்தது. ஒரு மாணவர் வாழ்க்கையில் எப்படி வெற்றிப்பெற வேண்டும்; எந்தமாதிரியான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று லயோலா கல்லூரி சொன்னது என்று அவர் கூறினார்.

DISCIPLINE and HEALTH இரண்டையும் நமது கண்களாக போற்ற வேண்டும். இந்த இரண்டும் சிறப்பாக இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று R.சரத்குமார் தெளிவுப்படுத்தினார். 

முன்னதாக கோலாலம்பூர் DOUBLE TREE HILTON தங்கும் விடுதியின் பிரம்மாண்ட அரங்கில் நடந்த 3ஆவது INTERNATIONAL LOYOLA ALUMNI MEET 2026 சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset