செய்திகள் மலேசியா
முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களைப் பராமரிக்க 80 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: பிரதமர்
கோலாலம்பூர்:
பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து நல்ல நிலையிலும், பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்யும் ஒரு முயற்சியாக, 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் அவற்றின் பராமரிப்பிற்காக அரசாங்கம் 80 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
நாட்டில் உள்ள பல மத சமூகத்தினரின் நலனைக் கவனிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் அதிகரிப்புதான் இந்த ஒதுக்கீடு என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கூடுதலாக, காம்பங் பாரு சீனாவில் உள்ள பழுதடைந்த உள்கட்டமைப்புகளைச் சரிசெய்து புனரமைப்பதற்காக அரசாங்கம் 100 மில்லியன் ரிங்கிட்டையும் ஒதுக்கியுள்ளது.
இந்த நடவடிக்கை, பொது வசதிகளை வலுப்படுத்துவதற்கும், உள்ளூர் சமூகத்தின் தேவைகளுக்குத் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
உள்கட்டமைப்பு, பதிவு செய்யப்பட்ட வழிபாட்டுத் தலங்களைப் பராமரிப்பது உட்பட, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் நலனைக் கவனித்து, பொது வசதிகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 9:05 pm
பட்ஜெட் 2027; மித்ராவிற்கான ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும்: பிரதமர் அன்வார்
October 9, 2026, 4:31 pm
சாரா எஸ்டிஆர் உதவிக்கான ஒதுக்கீடு 1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிப்பு: பிரதமர்
October 9, 2026, 4:30 pm
தனிநபர் வரிச் சலுகை 9,000 ரிங்கிட்டிலிருந்து 12,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டது: பிரதமர்
October 9, 2026, 4:28 pm
அடிப்படை சம்பளம் 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்: பிரதமர்
October 9, 2026, 3:34 pm
புகைமூட்டம் காரணமாக மலக்காவில் நடைபெறவிருந்த தேசிய விளையாட்டு தினம் நிகழ்ச்சி ஒத்திவைப்பு
October 9, 2026, 3:27 pm
2027 பட்ஜெட் கோப்புகளுடன் நாடாளுமன்றத்தை நோக்கி விரைந்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார்
October 9, 2026, 3:09 pm
பேராக் மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் புகைமூட்டம் காரணமாக பள்ளிகள் மூடல்
October 9, 2026, 12:44 pm
