நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாஆலத்தில் 11 வாகனங்கள் மீது மோதிய லோரி ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது பரிசோதனையில் உறுதி

ஷாஆலம்:

ஷாஆலம் புடிமான் போக்குவரத்து சந்திப்பில் 11 கார்கள் மீது மோதிய லோரி ஓட்டுநருக்கு ஆம்பெடமைன், மெத்தம்பெடமைன் அல்லது ஷயாபு போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டது.

அவருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் இவ்விரு வகை போதைப்பொருட்களும் இருப்பது கண்டறியப்பட்டது.

இதை அடுத்து, 51 வயதான அந்த நபர் விசாரணைக்கு உதவுவதற்காகக் கைது செய்யப்பட்டார்.

ஷாஆலம் மாவட்ட போலிஸ் தலைவர் ஷாரூதின் சமா கூறுகையில், மாலை சுமார் 4.20 மணியளவில் நடந்த இந்த விபத்தில், அந்த நபர் ஓட்டி வந்த லோரி உட்பட 12 வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்தன.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், புன்சாக் பெர்டானாவிலிருந்து புன்சாக் ஆலம் நோக்கி மலையிலிருந்து இறங்கும்போது தனது வாகனத்தின் பிரேக்கில் கோளாறு ஏற்பட்டதாகவும், அதன் பிறகு வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் லோரி ஓட்டுநர் கூறியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset