நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்ஜெட் 2027; மித்ராவிற்கான ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

இந்திய சமுதாய உருமாற்றத்திற்காக மித்ராவின் ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூரினார்.

மக்களவையில் 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர்,

இந்திய இளம் திறமையாளர்களை வளர்ப்பதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

எனவே, தொழில்துறை தன்னியக்கம், தொழில்நுட்பம், விமானப் பராமரிப்பு போன்ற துறைகளை உள்ளடக்கி, இந்திய இளைஞர்களுக்குப் பயிற்சியும் வேலை வாய்ப்பையும் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கவுள்ளது.

இதன் அடிப்படையில் மித்ரா ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும்.

இந்நிதி இந்திய உருமாற்ற திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset