செய்திகள் மலேசியா
தனிநபர் வரிச் சலுகை 9,000 ரிங்கிட்டிலிருந்து 12,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டது: பிரதமர்
கோலாலம்பூர்:
2028-ல் தாக்கல் செய்யப்பட வேண்டிய வரியான 2027 மதிப்பீட்டு ஆண்டிற்கான தனிநபர் வரிச் சலுகை 9,000 ரிங்கிட்டில் இருந்து 12,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்.
குடியிருப்பாளர்களுக்கான வருமான வரி விகிதம் ஒரு சதவீதப் புள்ளி குறைக்கப்படும்.
மற்ற வரிச் சலுகைகளின் வரம்பை விரிவுபடுத்தி பின்வருவனவற்றை உள்ளடக்குவதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
1. பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு.
2. சுகாதாரச் செலவுகள் மட்டுமல்லாமல், முதியோரைப் பராமரிப்பதற்கான அனைத்துச் செலவுகளும்.
3. விளையாட்டுக் காலணிகள்.
4. டியூஷன் வகுப்புகள் உட்பட அனைத்து வகையான படிப்புகளுக்குமான கல்விக் கட்டணம்.
5. செயற்கை நுண்ணறிவு சேவைகளுக்கான சந்தாக்கள்.
6. தடுப்பூசிகள்.
7. பதிவுசெய்யப்பட்ட காப்பகத்திலிருந்து ஒரு செல்லப்பிராணியைத் தத்தெடுப்பதற்கான செலவு ஆகியவை இதில் அடங்கும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 4:31 pm
சாரா எஸ்டிஆர் உதவிக்கான ஒதுக்கீடு 1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிப்பு: பிரதமர்
October 9, 2026, 4:28 pm
அடிப்படை சம்பளம் 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்: பிரதமர்
October 9, 2026, 3:34 pm
புகைமூட்டம் காரணமாக மலக்காவில் நடைபெறவிருந்த தேசிய விளையாட்டு தினம் நிகழ்ச்சி ஒத்திவைப்பு
October 9, 2026, 3:27 pm
2027 பட்ஜெட் கோப்புகளுடன் நாடாளுமன்றத்தை நோக்கி விரைந்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார்
October 9, 2026, 3:09 pm
பேராக் மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் புகைமூட்டம் காரணமாக பள்ளிகள் மூடல்
October 9, 2026, 12:44 pm
நிராகரிக்கப்பட்ட காதலால் ஐரீன் சோபியா இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார்: போலிஸ்
October 9, 2026, 12:29 pm
