நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட்டுடன் ஜொகூர் பாமோல் தோட்டத் தமிழ்ப்பள்ளி புதியதாக கட்டப்படும்: பிரதமர்

கோலாலம்பூர்:

ஜொகூர் குளுவாங்கில் அமைந்துள்ள பாமோல் தோட்டத் தமிழ்ப்பள்ளி புதியதாக கட்டப்படும்.

2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மாணவர்களின் கல்வி திட்டங்களில் மடானி அரசு சமரசம் செய்துக் கொள்ளாது.

அதன் அடிப்படையில் கல்வியை தவிர்த்து பள்ளிகள் பராமரிப்புக்கும் அரசு கூடுதல் நிதியை ஒதுக்கிறது.

குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்புக்காக அரசு 50 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்குகிறது.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 3,500 கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்படும்.

கூடுதல் வகுப்பறைகள் 2027 இல் முதலாமாண்டு மாணவர்களின் அதிகரிப்புக்கு இடமளிக்க வேண்டும்.

கல்வியமைச்சு புதிய பள்ளிகள், பாலர் கட்டிடங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பள்ளிகளில் வசதிகளை கட்டும்.

அதில் ஜொகூர் பாமோல் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் அடங்கும்.

2027-ஆம் ஆண்டில், சுமார் 5 லட்சம் மாணவர்கள் முதலாம் வகுப்பில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இவர்களில் 70,000-க்கும் மேற்பட்டோர் 6 வயதுடையவர்கள் ஆவர்.

அதிக மாணவர் அடர்த்தி கொண்ட 200 தொடக்கப் பள்ளிகளுக்கு ஆசிரியர் உதவியாளர் ஆட்சேர்ப்பு விரிவுபடுத்தப்படும்.

செயல்திறன் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்ட பிறகு இது கட்டங்களாக அதிகரிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

எழுத்துப் பணிகளால் சுமையின்றி, ஆசிரியர்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும் தங்கள் கடமைகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset