செய்திகள் மலேசியா
சாரா எஸ்டிஆர் உதவிக்கான ஒதுக்கீடு 1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிப்பு: பிரதமர்
கோலாலம்பூர்:
சாரா எஸ்டிஆர் உதவிக்கான ஒதுக்கீடு 1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
STR பெறுபவர்களுக்கான அடிப்படை ரஹ்மா பங்களிப்பு (சாரா), மாதத்திற்கு அதிகபட்சமாக 150 ரிங்கிட் அல்லது ஆண்டுக்கு 1,800 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்.
இந்த ஆண்டுத் தொகையானது, பட்ஜெட் 2026-இன் கீழ் STR பெறுபவர்களுக்கு வழங்கப்படும் 900 ரிங்கிடை விட இருமடங்கு ஆகும்.
கூடுதலாக, சாராவை இப்போது புதிய பொருட்களை வாங்குவதற்கும் பயன்படுத்தலாம் என்று பிரதமர் கூறினார்.
அடிப்படை சம்பளம் 2,000 ரிங்கிட்
நாட்டில் குறைந்தபட்ச ஊதிய விகிதம் ஜூன் 2027 முதல் 1,700 ரிங்கிட்டில் இருந்து 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்.
50 மில்லியன் ரிங்கிட்டுக்கும் குறைவான விற்பனை வருவாய் கொண்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விகிதத்தால் நாற்பது லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று அன்வர் கூறினார்.
மேலும், பகுதித் திறன் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான தொடக்க ஊதியமாக மாதத்திற்கு 2,500 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 4:30 pm
தனிநபர் வரிச் சலுகை 9,000 ரிங்கிட்டிலிருந்து 12,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டது: பிரதமர்
October 9, 2026, 4:28 pm
அடிப்படை சம்பளம் 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்: பிரதமர்
October 9, 2026, 3:34 pm
புகைமூட்டம் காரணமாக மலக்காவில் நடைபெறவிருந்த தேசிய விளையாட்டு தினம் நிகழ்ச்சி ஒத்திவைப்பு
October 9, 2026, 3:27 pm
2027 பட்ஜெட் கோப்புகளுடன் நாடாளுமன்றத்தை நோக்கி விரைந்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார்
October 9, 2026, 3:09 pm
பேராக் மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் புகைமூட்டம் காரணமாக பள்ளிகள் மூடல்
October 9, 2026, 12:44 pm
நிராகரிக்கப்பட்ட காதலால் ஐரீன் சோபியா இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார்: போலிஸ்
October 9, 2026, 12:29 pm
