செய்திகள் உலகம்
ஏ.ஐ மூலம் தேர்வில் மோசடி செய்து முதலிடம் பிடித்த மாணவர்: போலிஸ் விசாரணை
சியோல்:
தென் கொரியாவில் நடைபெற்ற தேசிய வரி கணக்காளர் தகுதித் தேர்வில் சாதனை மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த நபர் ஒருவர் தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தேர்வு எழுதியதாக ஒப்புக்கொண்டார்.
கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற இத்தேர்வின் இரு நிலைகளிலும் முதல் இடத்தைப் பிடித்த அந்த நபர், தேர்வின் போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் பதில்களைப் பெற்றதாகத் தனது வழக்கறிஞர் மூலமாக எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தத் தேர்வின் முதல் கட்டத்தில் மொத்தம் உள்ள நானுறு மதிப்பெண்களுக்கு முன்னூற்று தொன்னுற்றேழு மதிப்பெண்கள் பெற்ற அவர், நூற்றறுபது கேள்விகளில் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே தவறாகவிட்டிருந்தார்.
இத்தகைய அசாத்தியமான மற்றும் நம்ப முடியாத வெற்றியானது, அவர் தேர்வில் மோசடி செய்ய 'ஸ்மார்ட் கண்ணாடிகளை' பயன்படுத்தியிருக்கலாம் என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த அந்த நபர், தற்போது சமூகத்தின் மற்றும் அதிகாரிகளின் தொடர் அழுத்தங்களுக்குப் பிறகு தனது தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கு தற்போது புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தென் கொரியாவில் பெரும் பரபரப்பையும், தேசிய அளவிலான தேர்வுகளின் பாதுகாப்பு முறை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2026, 10:47 am
உலகம் முழுவதும் MICROSOFT 365 சேவைகள் முடக்கம்
November 12, 2026, 10:37 pm
கள்ள உறவு சர்ச்சை - என்விடியா CEO ஜென்சன் ஹுவாங் ராஜினாமா
November 12, 2026, 6:06 pm
பெல்ஜியத்தில் புதிய கழிவுநீர் குழாய்க்காகத் தோண்டும்போது, 9 மில்லியன் யூரோ மதிப்புள்ள தங்கம் கண்டெடுப்பு
November 11, 2026, 1:15 pm
புதைக்கப்பட்டு 24 மணி நேரத்திற்கு பின் 11 மாதக் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது
November 11, 2026, 11:46 am
காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினரின் தொடர் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் எழுவர் பலி
November 11, 2026, 11:39 am
அதிக சத்தத்துடன் பாட்டு போட்டதைத் தட்டி கேட்ட போலிஸ் அதிகாரியை பாராங்கத்தியுடன் இருவர் துரத்திய சம்பவம்
November 10, 2026, 10:45 am
BREAKING NEWS: Nvidia CEO சீன நிர்வாகியுடன் கள்ளத் தொடர்பு: ஒப்புக்கொண்டார் ஜென்சன் ஹுவாங்
November 9, 2026, 3:02 pm
காட்டுத்தீ அணைக்கும் முயற்சியில் ஹெலிகாப்டர் விழுந்தது: ஒருவர் பலி
November 7, 2026, 12:38 pm
