நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2027 முதல் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குத் தொழில்நுட்பம், தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படும்: ஃபட்லினா

கோலாலம்பூர்:

தொடக்கப் பள்ளி மாணவர்கள் சிறு வயதிலிருந்தே தொழில்நுட்பம், படைப்பாற்றல், சிக்கல் தீர்க்கும் திறன்களில் அடிப்படைத் திறன்களை வளர்ப்பதற்காக, 2027 பள்ளிப் பாடத்திட்டத்தின்மூலம் தொழில்நுட்பம், தொழிற்கல்வி, பயிற்சியின் கூறுகளுக்கு அறிமுகப்படுத்தப்படுவார்கள்.

கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.

பாடத்திட்டத்தின் அம்சங்கள், ஆசிரியர்களின் திறன், பள்ளி வசதிகள் உள்ளிட்ட இந்த அம்சத்தைச் செயல்படுத்துவதற்கான செயல்திறன் மற்றும் தயார்நிலையை கல்வியமைச்சு தற்போது ஆய்வு செய்து வருகிறது.

மலேசியக் கல்வித் திட்டம் 2026-2035, டிஜிட்டல் கல்விக் கொள்கை ஆகியவற்றிற்கு இணங்க, பாலர் பள்ளி முதல் இடைநிலைப் பள்ளி வரை பாடத்திட்டத்தில் திவேட் கூறுகள் மறைமுகமாகச் செயல்படுத்தப்படும்.

இருப்பினும், இந்த அணுகுமுறை குழந்தைகளை மிக இளம் வயதிலேயே வேலை உலகில் நுழையப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும், மாறாக அவர்களின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப அறிவு, திறன்கள், விழுமியங்களுக்கான அடித்தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

தொழில்நுட்பச் செயல்பாடுகள், வடிவமைப்பு, தயாரிப்பு உருவாக்கம், சிக்கல் தீர்த்தல், படைப்பாற்றல், கணக்கீட்டுச் சிந்தனை, பாதுகாப்பான பணி நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் இந்த உள்ளடக்கம் அறிவு, திறன்கள் மற்றும் விழுமியங்களுக்கான அடித்தளத்தை உருவாக்குகிறது.

திட்ட அடிப்படையிலான கற்றல் அணுகுமுறையும் உண்மையான அனுபவங்களும், மாணவர்கள் எளிய சிக்கல்களை ஆராயவும், யோசனைகளை உருவாக்கவும், வடிவமைக்கவும், தயாரிக்கவும், சோதிக்கவும் தங்கள் படைப்புகளை மேம்படுத்தவும் அனுமதிக்கின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset