செய்திகள் மலேசியா
பட்ஜெட் 2027; பி40 பிள்ளைகளுக்கான செயற்கை நுண்ணறிவு நிதியுடன் வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
கோலாலம்பூர்:
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் செயற்கை நுண்ணறிவு, இலக்கவியல் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெறுவதில் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, 2027 பட்ஜெட்டில் மாணவர் செயற்கை நுண்ணறிவு நிதி ஒன்றை அரசு உருவாக்க வேண்டும்.
டிஎஸ்கே அமைப்பின் தலைவரும் புரவலருமான டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவின் விரைவான வளர்ச்சியானது, எதிர்காலத்தில் வேலை உலகில் எதிர்கொள்ள வேண்டிய திறன்களுடன் இளம் தலைமுறையினரை முன்கூட்டியே தயார்படுத்த வேண்டும் என்பதை அவசியமாக்குகிறது.
பொருளாதார வசதி கொண்ட மாணவர்கள் மட்டுமே செயற்கை நுண்ணறிவில் தேர்ச்சி பெற முடியும் என்பதும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தொடர்ந்து பின்தங்கி இருப்பதும் கூடாது.
இந்த மாணவர் செயற்கை நுண்ணறிவு நிதியானது, தொழில்நுட்பம் சார்ந்த சாதனங்கள், கற்றல் வசதிகளைப் பெறுவதற்கு உதவுவதோடு, செயற்கை நுண்ணறிவு, நிரலாக்கம், ரோபாட்டிக்ஸ், இணைய வடிவமைப்பு, சைபர் பாதுகாப்பு போன்ற படிப்புகளுக்கு நிதியளிக்கவும் பயன்படுத்தப்படலாம்.
கணினி வசதிகள், இணையம், தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் நவீன கற்றல் உபகரணங்களை மேம்படுத்துவதற்காக இந்த உருமாற்ற நிதியின் மூலம் தமிழ்ப்பள்ளிகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்
குறைவான வசதிகள் கொண்ட பள்ளிகளில் உள்ள மாணவர்களும் சமீபத்திய தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ளும் வகையில், 'ஒரு பள்ளி, ஒரு செயற்கை நுண்ணறிவு ஆய்வகம்' திட்டத்தை அரசு, தனியார் துறை, தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து படிப்படியாக செயல்படுத்த வேண்டும் என்று என்று டத்தோ சிவக்குமார் முன்மொழிந்தார்.
கல்வியைத் தவிர மஹிமாவின் தலைவராகவும் இருக்கும் டத்தோ சிவக்குமார், பதிவுசெய்யப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சமூக உதவி மையங்களாகச் செயல்படுவதோடு, பசுமைத் தொழில்நுட்பப் பயன்பாடு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தவும் உதவும் வகையில் 'சமூகத்திற்கு உகந்த வழிபாட்டுத் தல மானியம்' ஒன்றை முன்மொழிந்தார்.
இனம், மதம் பாராமல் உள்ளூர் சமூகத்திற்கு உணவு வங்கிகள், அவசரகால உதவிகள், பயிற்சி வகுப்புகள், இலக்கவியல் கற்றல் மையங்களை வழங்கும் சமூக மையங்களாக வழிபாட்டுத் தலங்களை வலுப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
புகைமூட்டம்: 38 பகுதிகளில் ஆரோக்கியமற்ற ஏபிஐ பதிவாகியுள்ளது
October 8, 2026, 2:55 pm
தன் குடிமக்களைத் தாயகம் திரும்ப அழைத்து வருவதற்கான செலவை ஏற்க மியன்மார் தயாராக உள்ளது: பிரதமர்
October 8, 2026, 2:54 pm
எம்ஏசிசி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக நசீர் ஹுசைன் குற்றம் சாட்டுகிறார்
October 8, 2026, 2:53 pm
