நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழில்முறை வல்லுநர்களின் சராசரி சம்பளம் 6,000 ரிங்கிட்டாக இருந்தாலும், அவர்களால் சிங்கப்பூரில் 7,000 சிங்கப்பூர் டாலர் வரை சம்பாதிக்க முடிகிறது: டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

2024இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பதிலளித்தவர்களில் 94.5 சதவீதம் பேர், அதிக சம்பளம், அதிக வருவாய் ஈட்டும் வாய்ப்புகளே தங்களை சிங்கப்பூரில் பணிபுரிய ஈர்த்த முக்கிய காரணங்களாகும்.

நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ஆர். ரமணன் இதனை கூறினார்.

புள்ளியியல் துறையின் 2025 சம்பளம், ஊதியக் கணக்கெடுப்பு அறிக்கையின் அடிப்படையில், தொழில் வல்லுநர்களுக்கான சராசரி மாதச் சம்பளம் 6,124 ரிங்கிட்டாக இருந்தது என்று கூறினார்.

இதற்கு மாறாக, TalentCorp நடத்திய ஒரு ஆய்வில், சிங்கப்பூரில் பணிபுரியும் பெரும்பாலான மலேசிய தொழில் வல்லுநர்கள் மாதத்திற்கு 4,001 சிங்கப்பூர் டாலர் (12,773 ரிங்கிட்) முதல் 7,000 சிங்கப்பூர் டாலர்  (22,348 ரிங்கிட்) வரை சம்பாதிப்பதாகக் கண்டறியப்பட்டது.

அதே ஆய்வில், சிறப்புத் திறன்களும் அனுபவமும், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள மலேசிய தொழில் வல்லுநர்கள், குடியரசில் பணிபுரிந்தால் 10,000 சிங்கப்பூர் டாலர் (31,926) ரிங்கிட்டுக்கும் அதிகமாக சம்பாதிப்பதாகக் கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக, தொழிலாளர்களின் திறன்கள் மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிப்புக்கு ஏற்ப ஊதிய உயர்வுகளை வழங்க முதலாளிகளை ஊக்குவிக்கும் முற்போக்கு ஊதியக் கொள்கை மூலம் அரசாங்கம் உள்ளூர் ஊதிய உயர்வுகளை முன்னெடுத்து வருகிறது, இதற்கு அரசாங்கத்தின் ஊக்கத்தொகைகளும் துணைபுரிகின்றன என்று அவர் கூறினார்.

மாதம் 5,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக சம்பாதிக்கும் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset