நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஏசிசி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக நசீர் ஹுசைன் குற்றம் சாட்டுகிறார்

கோலாலம்பூர்:

சுமார் 10 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள முதலீடுகளில் நடந்த கையாடல் மற்றும் முறைகேடுகள் குறித்த விசாரணையை நடத்தியபோது எம்ஏசிசி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது.

யாயாசான் பேங்க் ரக்யாட் முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ நசீர் ஹுசைன் அக்தர் ஹுசைன் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

செப்டம்பர் 30 அன்று தனது இல்லத்திலும், தனது சகோதரர் முபாரக் ஹுசைனின் இல்லத்திலும் எம்ஏசிசி நடத்திய சோதனை,  பறிமுதல் நடவடிக்கைகளின்போதும், அதன் செயல்பாடுகள் தொழில்முறையற்றவையாக இருந்ததாக அவர் கூறினார்.

எம்ஏசிசி தான் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, ​​ 10 மில்லியன் ரிங்கிட் அறவாரிய நிதி விவகாரம் தொடர்பாக ஒரு நாள் மட்டுமே விசாரிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள நாட்களில் விசாரணைக்குத் தொடர்பில்லாத அரசியல் விஷயங்கள் குறித்து விசாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை 2022ஆம் ஆண்டில் எம்ஏசிசியால்  நடத்தப்பட்டது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக எந்தவிதமான முறைகேடுகளோ அல்லது ஒழுங்கீனங்களோ கண்டறியப்படவில்லை என்று அவர் புரிந்து கொண்டார்.

நான் எந்தவொரு குறிப்பிட்ட தரப்பினரின் நலன்களுக்கும் பலிகடாவாக்கப்படவோ அல்லது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படவோ கூடாது என்பதற்காக, இந்த விஷயத்தை நியாயமாகவும் முழுமையாகவும் பரிசீலிக்குமாறு தலைமை வழக்கறிஞரிடம் பணிவுடன் வேண்டுகிறேன்.

உண்மையான விவரங்களை அறிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்று நான் நம்புகிறேன்.

மேலும் எந்தவொரு சட்டபூர்வமான நடவடிக்கைக்கும் ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன் என்று முபாரக், அவரது வழக்கறிஞரும் கலந்துகொண்ட ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset