செய்திகள் மலேசியா
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
கோலாலம்பூர்:
புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், காற்று மாசுபாடு குறியீடு (ஏபிஐ) அளவு நீண்ட காலத்திற்கு 150 முதல் 180 வரை நீடித்தால், பள்ளிகளை மூட வேண்டும்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
தற்போது நாட்டைப் பாதித்துள்ள புகைமூட்டச் சூழலைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
முதியவர்கள், சுவாச நோயாளிகள் உட்பட, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைப் பாதுகாக்க, சம்பந்தப்பட்ட அமைச்சுகளும் முகமைகளும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
புகைமூட்டத்தைத் தொடர்ந்து, ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், முகக்கவசம் அணிவதற்கும், வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைப்பதற்கும் எப்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று மாமன்னர் முகநூலில் தெரிவித்தார்.
குறிப்பாக, அதிக காற்று மாசுபாடு குறியீட்டு (ஏபிஐ) அளவுகள் பதிவான பகுதிகளில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் தீவிர கவனம் செலுத்துமாறு கல்வியமைச்சை மாமன்னர் கேட்டுக்கொண்டார்.
மாலை 3 மணி நிலவரப்படி, மொத்தம் 38 பகுதிகளில் காற்று மாசுபாடு குறியீட்டு அளவுகள் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளன.
இதில், ஜொகூரின் சிகாமட் பகுதி 190 என்ற மிக உயர்ந்த அளவைப் பதிவுசெய்து, மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை நெருங்கியுள்ளது.
புத்ராஜயா, கோலாலம்பூர் மட்டுமின்றி, நெகிரி செம்பிலான், பகாங், சிலாங்கூர், மலாக்கா, பேரா, திரெங்கானு, பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
புகைமூட்டம்: 38 பகுதிகளில் ஆரோக்கியமற்ற ஏபிஐ பதிவாகியுள்ளது
October 8, 2026, 2:55 pm
தன் குடிமக்களைத் தாயகம் திரும்ப அழைத்து வருவதற்கான செலவை ஏற்க மியன்மார் தயாராக உள்ளது: பிரதமர்
October 8, 2026, 2:54 pm
எம்ஏசிசி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக நசீர் ஹுசைன் குற்றம் சாட்டுகிறார்
October 8, 2026, 2:53 pm
