செய்திகள் மலேசியா
உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் ஹலால் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்: டத்தோ மோசின்
ஈப்போ:
உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் ஹலால் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
பிரெஸ்மா தலைவர் டத்தோ ஹாஜி முகமது மோசின் இதனை கூறினார்.
பேரா மாநிலத்தில் நாசி கண்டார் உள்ளிட்ட உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோரிடையே ஹலால் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு, புரிதலை அதிகரிக்கும் நோக்கில் ஹலால் விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடைபெறறது.
உணவு சேவைத் துறையில் ஹலால் சான்றிதழ் பெறுவதன் அவசியம்.
அதற்கான தேவைகள், நடைமுறைகள் குறித்து தொழில்முனைவோருக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
ஹலால் அமலாக்கம் தொடர்பான அரசாங்க நிறுவனங்கள், உணவகத் தொழில்துறையினரிடையே வலுவான ஒத்துழைப்பையும் உருவாக்குவது இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், ஹலால் சான்றிதழ் பெறுவதற்கான தேவைகள், செயல்முறைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு மற்றும் தொடர்பு, ஹலால் தொடர்பான விதிமுறைகள், சட்டங்கள், உணவு கையாளுதல், ஹலால் கட்டுப்பாட்டில் சிறந்த நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது்
இந்நிகழ்வில் பேரா மாநிலத்தின் வர்த்தகம், விவசாயம், உணவுத் தொழில் தொடர்பான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ’ ஹாஜி முகமட் சூல் காஃப்லி ஹருன், பேரா இஸ்லாமிய சமய மன்றத் தலைவர் டத்தோ ஹாஜி ஹாரித் ஃபத்ஸிலா பின் ஹாஜி அப்துல் ஹலிம், சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறை பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு வழிகாட்டுதல்களை வழங்கினார்.
ஹலால் நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் வாடிக்கையாளர களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதுடன், உணவு வணிகங்களுக்கு கூடுதல் மதிப்பு, நம்பகத்தன்மையை உருவாக்க முடியும் என்று டத்தோ மோசின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
புகைமூட்டம்: 38 பகுதிகளில் ஆரோக்கியமற்ற ஏபிஐ பதிவாகியுள்ளது
October 8, 2026, 2:55 pm
தன் குடிமக்களைத் தாயகம் திரும்ப அழைத்து வருவதற்கான செலவை ஏற்க மியன்மார் தயாராக உள்ளது: பிரதமர்
October 8, 2026, 2:54 pm
எம்ஏசிசி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக நசீர் ஹுசைன் குற்றம் சாட்டுகிறார்
October 8, 2026, 2:53 pm
