நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதைப்பொருள் விமானம்: லாவோஸுக்கு தனியார் ஜெட் விமானத்தை வாடகைக்கு எடுத்தவரை போலிஸ் தேடி வருகிறது

கோலாலம்பூர்:

லாவோஸிலிருந்து பிலிப்பைன்ஸுக்கு 521 கிலோகிராம் (கிலோ) மெத்தம்பெட்டமைன் கடத்த முயன்றது தொடர்பாக, ஒரு தனியார் ஜெட் விமானத்தை வாடகைக்கு எடுக்க 202,250 மலேசிய ரிங்கிட் செலுத்திய ஒரு நபரை போலிஸ் தேடி வருகிறது.

அக்டோபர் 1 அன்று லுவாங் பிரபாங் சர்வதேச விமான நிலையத்தில் லாவோஸ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட அந்த விமானத்தை முன்பதிவு செய்த நபரைத் தனது துறை அடையாளம் கண்டு வருவதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.

அந்த விமானம், வாடகைக்காக இரண்டு ஜெட் விமானங்களை இயக்கி வந்த ஒரு மலேசிய தனியார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset