நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகைமூட்டம்: 38 பகுதிகளில் ஆரோக்கியமற்ற ஏபிஐ பதிவாகியுள்ளது

கோலாலம்பூர்:

இந்தோனேசியாவில் காடுகள்,  நிலங்களில் தீ தொடர்ந்து எரிந்து வருவதால், இன்று மதிய நிலவரப்படி 38 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுபடுத்தும் குறியீட்டு (ஏபிஐ) அளவுகள் பதிவாகியுள்ளதால், புகைமூட்டம் நாட்டைத் தொடர்ந்து பாதித்து வருகிறது.

அதிகபட்ச அளவுகளைப் பதிவு செய்த பகுதிகளில், செகாமட் 189 ஏபிஐ அளவுடனும், அதைத் தொடர்ந்து சிரம்பான் (185), நீலாய் (184), குளுவாங் (181), ஜோஹான் செத்தியா (179), ரொம்பின் (177), லார்கின், பாசிர் கூடாங் தலா 175 அளவுகளுடனும் செராஸ் (174) ஆகிய பகுதிகளும் அடங்கும்.

கூலிம் ஹை-டெக் (99), தாவாவ் (98), செரியான் (97), பாலேக் புலாவ் (95), அலோர் ஸ்டார்(94), கங்கார் (92), சமரஹான், கூச்சிங் ஆகிய இடங்களில் தலா 91 உட்பட, மொத்தம் 30 பிற பகுதிகளில் மிதமான ஏபிஐ-கள் பதிவாகியுள்ளன.

நேற்று உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 1,176 உயர் நம்பகத்தன்மை கொண்ட ஹாட் ஸ்பாட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்தோனேசிய வனத்துறை அமைச்சகம் அறிவித்த நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

முந்தைய நாள் பதிவான 1,201 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, ​​இந்த எண்ணிக்கை 25 புள்ளிகள் குறைவாகும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset