நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது

கோலாலம்பூர்:

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு,  பாதுகாப்பு முகமையின் (ஏகேபிஎஸ்) தலைமை இயக்குநர் டத்தோஶ்ரீ  முகமது சுஹாய்லி முகமது ஜைன் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை ஆவணங்களை, மேலதிக விசாரணைக்காக சட்டத்துறை தலைவர்  அலுவலகம் இன்று போலிஸ்படையிடம் திருப்பி அளித்தது.

இந்த வழக்கு தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, விசாரணையின் பல அம்சங்களை ஆராய்ந்து முடிக்க வேண்டும் என்று சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ முகமது டுசுகி மொக்தார் கூறினார்.

விசாரணையிலிருந்து எழும் பல தொடர்புடைய விஷயங்களுடன், சிசிடிவி பதிவுகளின் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பதும் கவனம் தேவைப்படும் விஷயங்களில் அடங்கும்.

சம்பந்தப்பட்ட விசாரணை ஆவணங்களை ஆராய்ந்த பிறகு, விசாரணையை முடிக்க மேலும் விசாரணை தேவைப்படும் பல அம்சங்கள் இருந்தன.

இந்த நோக்கத்திற்காக விசாரணை ஆவணங்கள் இன்று போலிஸ்  திருப்பி அனுப்பப்படும்.

சிசிடிவி காட்சிகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதும், வழக்கின் விசாரணையை நிறைவு செய்வதற்குத் தேவையான பல தொடர்புடைய விஷயங்களும் அடங்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset