நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தன் குடிமக்களைத் தாயகம் திரும்ப அழைத்து வருவதற்கான செலவை ஏற்க மியன்மார் தயாராக உள்ளது: பிரதமர்

புத்ராஜெயா:

தன் குடிமக்களைப் பெருமளவில் தாயகம் திரும்ப அழைத்து வரும் செயல்முறைக்கு உதவுவதற்கும், அது தொடர்பான செலவுகளை ஏற்பதற்கும் மியான்மர் தயாராக உள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வர் இப்ராஹிம் இதனை கூறினார்.

இதுவரை, 10,493க்கும் மேற்பட்ட மியான்மர் குடிமக்களும் பணியாளர்களும் விமானங்கள்,  கடற்படைக் கப்பல்கள் மூலம் நாட்டிற்குத் தாயகம் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும் தாயகம் திரும்ப அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மலேசிய உள்துறை அமைச்சிற்கும் மியன்மாரில் உள்ள தொடர்புடைய அமைச்சகங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யப்படும்.

தன் குடிமக்களைத் தாயகம் திரும்ப அழைத்து வருவதில் மியான்மர் காட்டியுள்ள விருப்பத்தை மலேசியா பாராட்டுவதாகவும், மிகச் சில நாடுகளே தங்கள் குடிமக்களைப் பெருமளவில் சொந்தச் செலவில் தாயகம் திரும்ப அழைத்து வருவதை ஏற்கத் தயாராக உள்ளன.

உண்மையில், மிகச் சில நாடுகளே, என் அனுபவத்தின்படி, மியன்மார் காட்டியுள்ளதைப் போல, தங்கள் குடிமக்களைப் பெருமளவில் சொந்தச் செலவில் தாயகம் திரும்ப அழைத்து வருவதை ஏற்க கிட்டத்தட்ட எந்த நாடும் தயாராக இல்லை என்று அவர் கூறினார்.

நேற்று தொடங்கிய மியன்மார் அதிபர் மின் ஆங் ஹ்லைங்கின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வப் பயணத்தையொட்டி நடைபெற்ற ஒரு கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த டத்தோஶ்ரீ அன்வார், மீதமுள்ள மியான்மர் குடிமக்கள், அவர்களது பதிவுகள் சரிபார்க்கப்பட்ட பிறகு, நிர்ணயிக்கப்பட்ட விதிகள், நடைமுறைகளின்படி திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset