செய்திகள் மலேசியா
கடுமையான புகைமூட்டம் காரணமாக செனாய் விமான நிலைய செயல்பாடுகளில் தடங்கல்
ஜொகூர் பாரு:
ஜொகூர் மாநிலத்தில் கடுமையான புகைமூட்டம் காரணமாக செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் விமான சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது
விமான சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதால் தரையிறங்க வேண்டிய விமானம் KLIA விமான நிலையத்திற்கோ அல்லது CHANGI விமான நிலையத்திற்கோ மாற்றிவிடப்படலாம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
"தரையிறங்குவதற்கான கட்டுப்பாடுகளுக்கு மேலதிகமாக, புறப்படும் விமானங்கள் தங்கள் புறப்பாட்டைத் தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டன," என்று லோக் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
ஜொகூர் மாநிலத்தின் எட்டு இடங்களில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பாக, சிகாமாட் 189ஆகவும் குளுவாங் 181ஆகவும் பாசீர் கூடாங் 175ஆகவும் கோத்தா திங்கியில் 161ஆகவும் காற்றின் தரம் மதிப்பிடப்பட்டுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 2:55 pm
தன் குடிமக்களைத் தாயகம் திரும்ப அழைத்து வருவதற்கான செலவை ஏற்க மியன்மார் தயாராக உள்ளது: பிரதமர்
October 8, 2026, 2:54 pm
எம்ஏசிசி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக நசீர் ஹுசைன் குற்றம் சாட்டுகிறார்
October 8, 2026, 2:53 pm
போதைப்பொருள் விமானம்: லாவோஸுக்கு தனியார் ஜெட் விமானத்தை வாடகைக்கு எடுத்தவரை போலிஸ் தேடி வருகிறது
October 8, 2026, 2:53 pm
2027 முதல் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குத் தொழில்நுட்பம், தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படும்: ஃபட்லினா
October 8, 2026, 2:02 pm
மோட்டார் சைக்கிள் லாரியுடன் மோதி சாலை விபத்து: மூன்று சகோதரர்கள் பலி
October 8, 2026, 2:00 pm
கோலா பிலாவில் 14 வயது மாணவனைக் கொலை செய்த சம்பவம்: இரு 4ஆம் படிவ மாணவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது
October 8, 2026, 1:43 pm
சர்ச்சைக்குரிய உரை காரணமாக சிப்பாங் அம்னோ தலைவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
October 8, 2026, 12:03 pm
