நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Container-இல் வாழ்ந்த இந்திய குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க டிபிகேஎல் ஒப்புதல்; இது செட்டிங்கோ விளம்பரமோ அல்ல, மக்களுக்கான போராட்டம்: டத்தோ ராஜா சைமன்

கோலாலம்பூர்:

சிகாம்புட்டில் Container-இல் வாழ்ந்த இந்திய குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க டிபிகேஎல் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கூட்டரசுப் பிரதேச மஇகா தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ ராஜா சைமன் இதனை கூறினார்.

கம்போங் சிகாம்புட் பஹாகியாவில் 13 குடும்பங்கள் வசித்து வந்தனர். இவர்கள் வசித்து வந்த வீடுகள் இருந்த இடம் மேம்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டது.

இதனால் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பலர் நஷ்டஈடு வாங்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.

ஆனால் இந்த மூன்று குடும்பங்களும் மாற்று வீடு வேண்டும் என போராடி வந்தனர்.

இதனால் மேம்பாட்டு நிறுவனம் தற்காலிகமாக அவர்களை கொள்கலனில் தங்க வைத்துள்ளது.

இக்குடும்பங்கள் கொள்கலனில் வசித்து வரும் விவகாரம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதன் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை நாங்கள் இங்கு வந்தோம்.

பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினையை கேட்டறிந்ததுடன் இப்பிரச்சினையை கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இந்திய குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க டிபிகேஎல் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அடுத்த வாரம் அவர்களுக்கு வீடுகளுக்கான கடிதங்கள் வழங்கப்படும்.

குறிப்பாக இவ்வீடுகளுக்கான முன்பணமும் கூட்டரசுப் பிரதேச மஇகா வழங்கும்.

ஆக மொத்தத்தில் இம்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.


இது மஇகாவின் செட்டிங்கோ விளம்பரமோ அல்ல. மாறாக மக்களுக்காக நடத்தப்பட்ட போராட்டம்.

இதை யாரும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்று டத்தோ ராஜா சைமன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset