செய்திகள் மலேசியா
கோலா பிலாவில் 14 வயது மாணவனைக் கொலை செய்த சம்பவம்: இரு 4ஆம் படிவ மாணவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது
கோலா பிலா:
கடந்த மாதம் பள்ளி தங்கும் விடுதியில் 2ஆம் படிவ மாணவனைக் கொலை செய்ததாக இரு 4ஆம் படிவ மாணவர்கள் இன்று கோலா பிலா மாஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
நீதிபதி ரொஸ்லிண்டா ரசாலி முன்னிலையில் கொலை குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட 16 வயது மாணவர்களிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கொலை குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்தின் வரம்பிற்கு உட்பட்டதால் அவர்களிடம் வாக்குமூலம் பெறவில்லை.
செப்டம்பர் 25 ஆம் தேதி மாலை 7.30 மணிக்கும் 8.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், கோலா பிலாவில் உள்ள ஒரு ஆண்கள் பள்ளியின் விடுதியில் 14 வயதான இட்லான் ஃபரீக் ஷாரில் என்பவரைக் கொலை செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. 12 கசையடிகள் என வகைப்படுத்தப்படும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302 கொலை குற்றச்சாட்டின் கீழ் இந்த குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது
இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 7ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டதாக மாணவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஹனிஃப் ஹசான் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 2:55 pm
தன் குடிமக்களைத் தாயகம் திரும்ப அழைத்து வருவதற்கான செலவை ஏற்க மியன்மார் தயாராக உள்ளது: பிரதமர்
October 8, 2026, 2:54 pm
எம்ஏசிசி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக நசீர் ஹுசைன் குற்றம் சாட்டுகிறார்
October 8, 2026, 2:53 pm
போதைப்பொருள் விமானம்: லாவோஸுக்கு தனியார் ஜெட் விமானத்தை வாடகைக்கு எடுத்தவரை போலிஸ் தேடி வருகிறது
October 8, 2026, 2:53 pm
2027 முதல் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குத் தொழில்நுட்பம், தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படும்: ஃபட்லினா
October 8, 2026, 2:27 pm
கடுமையான புகைமூட்டம் காரணமாக செனாய் விமான நிலைய செயல்பாடுகளில் தடங்கல்
October 8, 2026, 2:02 pm
மோட்டார் சைக்கிள் லாரியுடன் மோதி சாலை விபத்து: மூன்று சகோதரர்கள் பலி
October 8, 2026, 1:43 pm
சர்ச்சைக்குரிய உரை காரணமாக சிப்பாங் அம்னோ தலைவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
October 8, 2026, 12:03 pm
