செய்திகள் மலேசியா
துணைப்பிரதமரின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு குழுவைப் பின் தொடர்ந்த சம்பவம்: 27 வயது நபர் கைது
கோலாலம்பூர்:
துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடியின் பாதுகாப்பு குழுவை பின் தொடர்ந்ததாக 27 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேசாஸ் நெடுஞ்சாலையில் காவல்துறைப் பாதுகாப்புக் குழுவை நெருக்கமாகப் பின்தொடர்ந்த சந்தேகநபர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் காஜாங்கில் இருந்து சன்வே மருத்துவமனைக்கு பாதுகாப்பு வாகனம் சென்றபோது இடம்பெற்றது.
ஷா ஆலம் நெடுஞ்சாலையின் 48.5ஆவது கிலோமீட்டரில் காலை சுமார் 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் பதிவானது.
பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி அந்த ஓட்டுநரை எச்சரித்தார்.
இருப்பினும், ஹோண்டா சி.ஆர்-வி (Honda CR-V) காரின் ஓட்டுநர் அந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து உதாசீனம் செய்தார்.
காவல்துறையின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அவர் வாகனத்தை மிக நெருக்கமாகத் தொடர்ந்தார். மற்ற சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பிற்கும் பாதுகாப்பு வாகனத்திற்கும் இதனால் ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்தது.
சந்தேகநபரின் இத்தகைய ஆபத்தான செயல் குறித்து கோலாலம்பூர் போக்குவரத்துத் துறைத் தலைவர் சம்சூரி ஈசா விளக்கமளித்தார்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் குலைக்கும் வகையில் ஓட்டுநர் தொடர்ந்து செயல்பட்டதாக அவர் குறிப்பிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். மேலும் அவர் ஓட்டிச் சென்ற வாகனமும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 2:27 pm
கடுமையான புகைமூட்டம் காரணமாக செனாய் விமான நிலைய செயல்பாடுகளில் தடங்கல்
October 8, 2026, 2:02 pm
மோட்டார் சைக்கிள் லாரியுடன் மோதி சாலை விபத்து: மூன்று சகோதரர்கள் பலி
October 8, 2026, 2:00 pm
கோலா பிலாவில் 14 வயது மாணவனைக் கொலை செய்த சம்பவம்: இரு 4ஆம் படிவ மாணவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது
October 8, 2026, 1:43 pm
சர்ச்சைக்குரிய உரை காரணமாக சிப்பாங் அம்னோ தலைவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
October 8, 2026, 11:26 am
பிரதமர் அன்வார், மியன்மார் அதிபர் மின் ஆங் ஹேங்கைப் புத்ராஜெயாவில் சந்தித்து பேசினார்
October 8, 2026, 10:20 am
கலிமந்தானில் திறந்தவெளி எரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: பகாங் சுல்தான் வலியுறுத்தல்
October 8, 2026, 9:52 am
2027 பட்ஜெட் மடானி செயல்திட்டத்தைத் தொடர்வதுடன் எம்40 பிரிவினர் மீது கவனம் செலுத்த வேண்டும்: குணராஜ்
October 8, 2026, 9:42 am
