நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோட்டார் சைக்கிள் லாரியுடன் மோதி சாலை விபத்து: மூன்று சகோதரர்கள் பலி 

பொந்தியான்: 

இன்று அதிகாலையில் ஜாலான் பாரிட் ஹஜி சிராட் எனும் சாலையில் மோட்டார் சைக்கிள் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் மூன்று சகோதரர்கள் உயிரிழந்தனர். 

பலியானவர்களில் இருவர் 11 மற்றும் 8 வயதுடையவர்கள் என்றும் மற்றொருவர் 18 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டது 

புகைமூட்டம் காரணமாக ஜொகூர் மாநிலத்தில் இரு நாட்களுக்குப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை அந்த மூன்று உடன்பிறப்புகளுக்கும் தெரியாததால் காலை வேளையில் அவர்கள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது 

இந்த விபத்து போலிஸ் துரித விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொந்தியான் மாவட்ட காவல்துறை தலைவர் ஹட்ஸ்ராட் மியோன் உசைன் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset