நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சர்ச்சைக்குரிய உரை காரணமாக சிப்பாங் அம்னோ தலைவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது 

சிப்பாங்: 

கடந்த மாதம் சர்ச்சைக்குரிய வகையில் கிறிஸ்த்துவ மதத்தை இழிபடுத்தும் வகையில் உரையாற்றியதாக சிப்பாங் அம்னோ தலைவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது 

இருப்பினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து விசாரணை கோரினார். 

மாஜிஸ்திரேட் நுரூல் இசா ஹசான் பஸ்ரி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர் அதனை மறுத்தார் 

2026 அம்னோ பொதுப்பேரவையில் மதத்தை புண்படுத்தும் வகையில் உரை நிகழ்த்தியதாக 48 வயதுடைய நூரஸ்லி மீது குற்றஞ்சாட்டப்பட்டது 

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 298 இன் கீழ் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். 

நூரஸ்லிக்கு ஒரு ஜாமீனுடன் RM6,000 ஜாமீன் வழங்கப்பட்டது. துணை அரசு வழக்கறிஞர் ஃபத்லி சம்ரி, ஒரு ஜாமீனுடன் RM15,000 ஜாமீன் வழங்கப் பரிந்துரைத்தார்.

இருப்பினும், நூராஸ்லியின் வழக்கறிஞர் ஹஸ்னல் ரெசுவா மெரிக்கன், அந்தத் தொகையை RM4,000 முதல் RM5,000 வரை குறைக்குமாறு கோரினார்.

அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்த பிறகு, நூருல் இஸ்ஸா, நூராஸ்லிக்கு ஒரு ஜாமீனுடன் RM6,000 ஜாமீன் வழங்கி, வழக்கு விசாரணைக்காக நவம்பர் 18-ஐ நிர்ணயித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset