நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவா மாநில சட்டமன்றம் நவம்பரில் கலைக்கப்படலாம்: அப்துல் கரீம்

கூச்சிங்:

சரவா மாநில சட்டமன்றம், நவம்பரில் அல்லது 2027ஆம் ஆண்டுக்கான சரவா நிதிநிலை அறிக்கை அங்கீகரிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரவாக் சுற்றுலா, படைப்பாற்றல் தொழில்  துறை அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஸா இதனை கூறினார்.

அடுத்த சரவா சட்டமன்றக் கூட்டத்தில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

மாநில அரசின் பதவிக்காலம் முடிவடையும் பிப்ரவரி 2027இல், சரவா சட்டமன்றம் தானாகவே கலைந்துவிட சரவாக் அரசு அனுமதிக்காது என்று அவர் கூறினார்.

சரவாக்கைப் பொறுத்தவரை முதல்வர் ஆகியோர் சட்டமன்றக் குழுவைத் தானாகக் கலைக்க அனுமதிப்பது அரிது. பொதுவாக அவர்களே கலைப்புக்குக் கோரிக்கை விடுப்பார்கள்.

எனவே, அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் இன்னும் பல மாதங்கள் தொலைவில் இருப்பதால், நாம் விரைவில் தேர்தல்களை நடத்த வேண்டும்.

கலைப்புக்கான தேதி நவம்பர் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset