செய்திகள் மலேசியா
கலிமந்தானில் திறந்தவெளி எரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: பகாங் சுல்தான் வலியுறுத்தல்
குவாந்தான்:
தற்போது பாதித்து வரும் புகைமூட்டத்தைக் குறைக்க உதவும் வகையில் மழையைப் பொழியுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கேட்குமாறு பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லாஹ் ரியாத்துதீன், பகாங், மலேசியா மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
பகாங் சுல்தானின் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டத்தோ முஹம்மது ஜஹாரி யஹ்யா விடுத்துள்ள ஓர் அறிக்கையில்,
இந்தோனேசியாவின் கலிமந்தானில் உள்ள சமூகத்தினரும் தோட்ட நிறுவனங்களும், காற்று மாசுபாட்டிற்கு வழிவகுத்து, இப்பகுதி மக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கக்கூடிய திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து விழிப்புணர்வு பெறுவார்கள் என்றும் சுல்தான் நம்பிக்கை தெரிவித்ததாகக் கூறினார்.
புகைமூட்டத்தைக் கையாள்வதற்கான முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை.
அத்துடன் மக்களின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் எப்போதும் பேணப்படுவதை உறுதிசெய்ய தொடர்ச்சியான முயற்சிகள் தேவை.
இது தொடர்பாக, தற்போது நிலவி வரும் புகைமூட்டச் சூழலைச் சமாளிக்கத் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதுடன், அல்லாஹ்விடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
மேலும், வானிலை சீரடையும். மழை விரைவில் பெய்து, அதன் மூலம் காற்றைச் சுத்தப்படுத்தி, தற்போது நிலவி வரும் புகைமூட்டத்தின் தாக்கங்களைக் குறைக்கும் சுல்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 2:27 pm
கடுமையான புகைமூட்டம் காரணமாக செனாய் விமான நிலைய செயல்பாடுகளில் தடங்கல்
October 8, 2026, 2:02 pm
மோட்டார் சைக்கிள் லாரியுடன் மோதி சாலை விபத்து: மூன்று சகோதரர்கள் பலி
October 8, 2026, 2:00 pm
கோலா பிலாவில் 14 வயது மாணவனைக் கொலை செய்த சம்பவம்: இரு 4ஆம் படிவ மாணவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது
October 8, 2026, 1:43 pm
சர்ச்சைக்குரிய உரை காரணமாக சிப்பாங் அம்னோ தலைவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
October 8, 2026, 12:03 pm
துணைப்பிரதமரின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு குழுவைப் பின் தொடர்ந்த சம்பவம்: 27 வயது நபர் கைது
October 8, 2026, 11:26 am
பிரதமர் அன்வார், மியன்மார் அதிபர் மின் ஆங் ஹேங்கைப் புத்ராஜெயாவில் சந்தித்து பேசினார்
October 8, 2026, 9:52 am
2027 பட்ஜெட் மடானி செயல்திட்டத்தைத் தொடர்வதுடன் எம்40 பிரிவினர் மீது கவனம் செலுத்த வேண்டும்: குணராஜ்
October 8, 2026, 9:42 am
