நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் அன்வார், மியன்மார் அதிபர் மின் ஆங் ஹேங்கைப் புத்ராஜெயாவில் சந்தித்து பேசினார் 

புத்ராஜெயா: 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று புத்ராஜெயா பெர்டானா புத்ராவில் மியன்மர் அதிபர் மின் ஆங் ஹேங்கைச் சந்தித்துப் பேசினார்.

இரு நாடுகளுக்கு இடையேயான இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பு, மலேசியாவில் உள்ள மியன்மர் பிரஜைகளின் விவகாரங்களை மையமாகக் கொண்டது.

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள மியன்மர் நாட்டினரைத் திருப்பி அனுப்புவது குறித்து இரு தலைவர்களும் முக்கியமாக விவாதித்தனர்.

ரோஹிங்கியா, அரக்கான், களின் மற்றும் ஷான் இனத்தவர் உட்பட 10,000 மியான்மர் detainees இதுவரை தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மியான்மர் நாட்டினரைத், குறிப்பாக ரோஹிங்கியா அகதிகளை விரைவில் திருப்பி அனுப்பும் பேச்சுவார்த்தையைத் துரிதப்படுத்த அன்வார் கடந்த மாதம் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கமைவாக, முதல் கட்டமாக கடந்த செப்டம்பர் 29 அன்று 1,476 மியான்மர் பிரஜைகள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீதமுள்ள 3,524 பேரைத் திருப்பி அனுப்பும் இரண்டாவது கட்டத் திட்டத்திற்காக மலேசியா தற்போது மியான்மரின் உறுதிப்படுத்தலுக்காகக் காத்திருக்கிறது.

மியான்மர் அரசாங்கம் படிப்படியாக 5,000 குடிமக்களை ஏற்றுக்கொள்ள ஏற்கனவே உடன்பாடு எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மின் ஆங் ஹேங்கின் இந்த வருகை, 48வது ஆசியான் உச்சி மாநாட்டு முடிவுகளின் அடிப்படையில் மியான்மருடன் ஆக்கபூர்வமான ஈடுதலைத் தொடர வழிவகுக்கும் என்று விஸ்மா புத்ரா கூறியுள்ளது.

மியான்மரின் தற்போதைய நிலவரங்களையும், இரு தரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவது குறித்தும் இந்த இரு நாள் விஜயத்தில் ஆழமாக ஆராயப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset