செய்திகள் மலேசியா
2027 பட்ஜெட் மடானி செயல்திட்டத்தைத் தொடர்வதுடன் எம்40 பிரிவினர் மீது கவனம் செலுத்த வேண்டும்: குணராஜ்
செந்தோசா:
2027 பட்ஜெட் மக்களுக்கு உதவும் மடானி அரசாங்கத்தின் செயல்திட்டத்தின் வேகத்தைத் தொடர வேண்டும்.
அதே நேரத்தில், வாழ்க்கைச் செலவு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எம்40 பிரிவினரின் தேவைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிமுகப்படுத்திய பல்வேறு முன்முயற்சிகள், வாழ்க்கைச் செலவைக் குறைப்பதிலும், மக்களின் நலனை வலுப்படுத்துவதிலும், தேவைப்படுபவர்களுக்கு உதவி சென்றடைவதை உறுதி செய்வதிலும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன.
குறிப்பிட்ட சில உதவிகளைப் பெறத் தகுதி இல்லாத, ஆனால் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் எம்40 குடும்பங்கள் உட்பட, மக்களின் தேவைகளை இன்னும் விரிவாகக் கருத்தில் கொள்ளும் பட்ஜெட் 2027லும் இந்த அணுகுமுறை தொடரப்பட வேண்டும்.
பிரதமரும் மடானி அரசும் பல நேர்மறையான காரியங்களைச் செய்துள்ளனர்.
இருப்பினும், மக்களின் மாறிவரும் தேவைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாழ்க்கைச் செலவைப் பற்றிப் பேசும்போது, நாம் பி40 பிரிவினரை மட்டும் பார்க்க வேண்டாம்.
ஏனெனில் எம்40 பிரிவினருக்கும் வீடுகள், வாகனங்கள், குழந்தைகளின் கல்வி, பெற்றோர் பராமரிப்பு மற்றும் அன்றாடச் செலவுகள் போன்ற பெரிய பொறுப்புகள் உள்ளன.
ஆக கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயங்களில் வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம், பொதுப் போக்குவரத்து, குழந்தை பராமரிப்புச் செலவுகள் ஆகியவை அடங்கும்.
மேலும், இளைஞர்கள் தங்கள் முதல் வீட்டைச் சொந்தமாக்க உதவுவது, நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வியைப் பாதியில் கைவிடாமல் இருப்பதை உறுதி செய்வதும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 2:27 pm
கடுமையான புகைமூட்டம் காரணமாக செனாய் விமான நிலைய செயல்பாடுகளில் தடங்கல்
October 8, 2026, 2:02 pm
மோட்டார் சைக்கிள் லாரியுடன் மோதி சாலை விபத்து: மூன்று சகோதரர்கள் பலி
October 8, 2026, 2:00 pm
கோலா பிலாவில் 14 வயது மாணவனைக் கொலை செய்த சம்பவம்: இரு 4ஆம் படிவ மாணவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது
October 8, 2026, 1:43 pm
சர்ச்சைக்குரிய உரை காரணமாக சிப்பாங் அம்னோ தலைவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
October 8, 2026, 12:03 pm
துணைப்பிரதமரின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு குழுவைப் பின் தொடர்ந்த சம்பவம்: 27 வயது நபர் கைது
October 8, 2026, 11:26 am
பிரதமர் அன்வார், மியன்மார் அதிபர் மின் ஆங் ஹேங்கைப் புத்ராஜெயாவில் சந்தித்து பேசினார்
October 8, 2026, 10:20 am
கலிமந்தானில் திறந்தவெளி எரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: பகாங் சுல்தான் வலியுறுத்தல்
October 8, 2026, 9:42 am
