நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகைமூட்டம்: நாளை முதல் ஜொகூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 2 நாட்களுக்கு மூடப்படும்

ஜொகூர்பாரு:

மாநிலம் முழுவதும் நிலவும் புகைமூட்டம், மோசமான காற்றுத் தரம் காரணமாக, ஜொகூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை, வெள்ளிக்கிழமை மூடப்படும்.

மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியத்திற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜொகூரின் அரசப் பிரதிநிதி சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயிலின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநில கல்வி, தகவல் குழுவின் தலைவர் டாக்டர் முஹம்மது நாகிப் முகமது கசாலி தெரிவித்தார்.

இந்த மூடல் நடவடிக்கை 1,198 பள்ளிகளிலும், 617,258 மாணவர்களும் உள்ளடக்கும்.

அதன்படி, மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜோஹோர் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் அக்டோபர் 8, 9 ஆகிய இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset