செய்திகள் மலேசியா
வீட்டுக்காவல் தொடர்பான செயல்பட்டு தரவிதிமுறைகள்: நஜிப்பிடம் சிறைத்துறை வழங்கிவிட்டது
பெட்டாலிங் ஜெயா:
வீட்டுக்காவல் தொடர்பான செயல்பாட்டு தரவிதிமுறைகளை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடம் சிறைத்துறை வழங்கிவிட்டதாக பிரதமர் துறை சட்டப்பிரிவு தலைமை இயக்குநர் ஸம்ரி மிஸ்மான் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிறை துறை அதிகாரிகள் நஜிப் ரசாக்கிடம் தகவல்களை வழங்கிவிட்டதாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
கடந்த மாதம், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் நஜிப் ரசாக் தனது எஞ்சிய சிறை தண்டனையை வீட்டுக்காவலில் கழிக்க வழிவகை செய்யப்பட்டது
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் பொது மன்னிப்பு இணக்கம் வழங்கி உத்தரவிட்டார்
SRC INTERNATIONAL வழகில் நஜிப் ரசாக் 23 ஆகஸ்ட் 2028 வரை வீட்டுக் காவலில் இருப்பார். அதற்கு முன் அவர் 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் தொகை செலுத்த வேண்டும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 11:05 pm
மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர். ராஜனை உடல் நலம் விசாரித்தார் துணையமைச்சர் தியோ நீ சிங்
October 7, 2026, 11:05 pm
14ஆவது ரோயல் சிலாங்கூர் கிளப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க டார்ட்ஸ் போட்டி: 32 அணிகள் பங்கேற்பு
October 7, 2026, 11:02 pm
புகைமூட்டம்: நாளை முதல் ஜொகூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 2 நாட்களுக்கு மூடப்படும்
October 7, 2026, 4:42 pm
19 வயது மாணவி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதற்கு பொறாமையே காரணம்: போலிஸ்
October 7, 2026, 1:46 pm
