செய்திகள் மலேசியா
மலாக்கா இந்து ஈமக் சடங்கு மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது; இது அரசியல் அல்ல, சமுதாயத்தின் உரிமை போராட்டம்: டத்தோ சண்முகம்
மலாக்கா:
மலாக்கா மாநில இந்தியர்களின் நீண்டக் கால பிரச்சினையான இந்து ஈமச் சடங்கு மையத்திற்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.
இது அரசியல் அல்ல, சமுதாயத்தின் உரிமை போராட்டம் என்று மலாக்கா மாநில நடப்பு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ விபி சண்முகம் இதனை கூறினார்.
மலாக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஈமக்காரியம் செய்ய இடமில்லை என்ற பிரச்சினை ஒரு தொடர் கதையாக இருந்து வந்தது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தேசிய முன்னணி தலைவர்களும் நம்பிக்கை கூட்டணி தலைவர்களும் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் மலாக்கா மாநில இந்தியர்களுக்கான ஈமக்காரியம் செய்யும் இடப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மலாக்கா மாநில முதலமைச்சர் டத்தோ அப்துல் ரவுஃப் ஆதரவுடன் தற்போது 10 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதல் அனைத்தும் முறையாக வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் அங்கு ஈமக்காரியங்கள் செய்வதற்காக மண்டபங்களும் கட்டப்படவுள்ளது.
அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து ஈமச் சடங்கு மையத்தின் கட்டுமான பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்படும்.
ஆக மொத்தத்தில் மலக்கா மாநில இந்தியர்களிடையே நிலவி வந்த பிரச்சனைக்கு ஒரு சுமுகமான தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் நெருங்கி விட்டதால் இதனை யாரும் அரசியலாக பார்க்க வேண்டாம்.
சமுதாயத்தின் உரிமை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்க வேண்டும் என்று டத்தோ சண்முகம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 11:05 pm
மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர். ராஜனை உடல் நலம் விசாரித்தார் துணையமைச்சர் தியோ நீ சிங்
October 7, 2026, 11:05 pm
14ஆவது ரோயல் சிலாங்கூர் கிளப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க டார்ட்ஸ் போட்டி: 32 அணிகள் பங்கேற்பு
October 7, 2026, 11:02 pm
புகைமூட்டம்: நாளை முதல் ஜொகூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 2 நாட்களுக்கு மூடப்படும்
October 7, 2026, 4:42 pm
19 வயது மாணவி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதற்கு பொறாமையே காரணம்: போலிஸ்
October 7, 2026, 2:49 pm
வீட்டுக்காவல் தொடர்பான செயல்பட்டு தரவிதிமுறைகள்: நஜிப்பிடம் சிறைத்துறை வழங்கிவிட்டது
October 7, 2026, 1:46 pm
