செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தல்; அக்டோபர் 31 வேட்புமனு தாக்கல், நவம்பர் 14இல் வாக்குப் பதிவு: தேர்தல் ஆணையம்
புத்ராஜெயா:
16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளாக நவம்பர் 14ஆம் தேதியை தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.
வேட்பாளர் நியமன நாள் அக்டோபர் 31 என்றும், முன்கூட்டியே வாக்களிக்கும் நாள் நவம்பர் 10 என்றும் தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹரூண் தெரிவித்தார்.
அக்டோபர் 31 அன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் பிரச்சாரக் காலம் தொடங்கி நவம்பர் 13 அன்று இரவு 11.59 மணி வரை நீடிக்கும்.
இன்று இங்கு நடைபெற்ற சிறப்பு தேர்தல் ஆணையக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர், செய்தியாளர் சந்திப்பில் அவர் இதை அறிவித்தார்.
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரவுஃப் யூசோ, மலாக்கா மாநில சட்டமன்றம் (DUN) செப்டம்பர் 23 முதல் கலைக்கப்படுவதாக அறிவித்தார்.
மலாக்கா மாநில சட்டமன்றத்தில் 28 இடங்கள் உள்ளன.
கடந்த தேர்தலில் தேசிய முன்னணி 21 இடங்களையும், நம்பிக்கை கூட்டணி ஐந்து இடங்களையும், தேசியக் கூட்டணி இரண்டு இடங்களையும் வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 11:05 pm
மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர். ராஜனை உடல் நலம் விசாரித்தார் துணையமைச்சர் தியோ நீ சிங்
October 7, 2026, 11:05 pm
14ஆவது ரோயல் சிலாங்கூர் கிளப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க டார்ட்ஸ் போட்டி: 32 அணிகள் பங்கேற்பு
October 7, 2026, 11:02 pm
புகைமூட்டம்: நாளை முதல் ஜொகூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 2 நாட்களுக்கு மூடப்படும்
October 7, 2026, 4:42 pm
19 வயது மாணவி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதற்கு பொறாமையே காரணம்: போலிஸ்
October 7, 2026, 2:49 pm
