நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 கார்கள் தீயில் அழிந்தன

ஜொகூர்பாரு:

ஜொகூர்பாரு சிட்டி ஸ்கொயர் பேரங்காடி வளாகத்தின் இரண்டாவது அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 10 கார்கள் அழிந்தன.

தீயணைப்புப் படையின் மூத்த செயல்பாட்டுக் கட்டளை அதிகாரி, துணைத் தீயணைப்புத் தலைவர் சுஹைமி ஜமால் இதனை கூறினார்.

இந்தச் சம்பவத்தில், எட்டு வாகனங்கள் 80 முதல் 90 சதவீதம் வரை எரிந்து சாம்பலாயின.

மேலும் இரண்டு வாகனங்கள் 20 முதல் 30 சதவீதம் வரை சேதமடைந்தன.

செயல்பாட்டு மீட்புக் குழு,ஒரு தீயணைப்பு வாகனம், ஒரு அவசர மருத்துவ சேவைகள் பிரிவு, வாகனம் ஆகியவை ஆறு நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்திற்கு வந்தன.

சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​வணிக வளாகக் கட்டிடத்தின் இரண்டாவது அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

ஆய்வின்போது அப்பகுதியில் சுமார் 10 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது கண்டறியப்பட்டது.

முன்னதாக, வணிக வளாகத்தின் தரைக்கீழ் வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்று தீப்பிடித்ததில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட மூன்று பேரில் ஒரு சிங்கப்பூர் பெண்ணும் அடங்குவார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உள்ளூர் பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset