நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகைமூட்டம்: பத்து பகாட்டில் பள்ளிகள், பாலர் பள்ளிகள் மூடப்பட்டன

பத்துபகாட்

காற்றில் மாசுபடுத்தும் குறியீடு (ஏபிஐ) 200-ஐத் தாண்டியதைத் தொடர்ந்து, பத்து பகாட் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகள், பாலர் பள்ளிகள், நர்சரிகள் இன்று முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது மிகவும் ஆரோக்கியமற்ற அளவாகும்.

பத்து பகாட் மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழு,  நேற்று இரவு நிலவரப்படி மாவட்டத்தில் ஏபிஐ அளவு 203 ஆக இருந்ததாக அறிவித்தது.

மாணவர்கள், பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் எப்போதும் பேணப்படுவதை உறுதி செய்வதற்காக, தேசிய புகைமூட்டத் தடுப்பு நடவடிக்கை திட்டம் மற்றும் கல்வியமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்த மூடல்கள் செய்யப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சு, ஜொகூர் மாநில கல்வித் துறை, பத்து பகாட் மாவட்ட கல்வி அலுவலகம் ஆகியவற்றால் அறிவுறுத்தப்பட்டால், நடைமுறையில் உள்ள அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, பள்ளிகள் வீட்டிலிருந்தே கற்பித்தல் மற்றும் கற்றல்  முறையைச் செயல்படுத்த வேண்டும்.

மேலும் வீட்டில் இருந்தே படிக்கும் முறையைச் செயல்படுத்தும்  முறை, மாணவர் ஒப்படைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு வழிகள் குறித்து பள்ளிகள், அதிகாரப்பூர்வ பள்ளி வழிமுறைகள் மூலம் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset