நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லாவோஸில் தனியார் விமானத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 521 கிலோகிராம் போதைப்பொருள் மலேசியாவிலிருந்து வரவில்லை: ஹுசைன் ஓமர்

கோலாலம்பூர்:

லாவோஸில் ஒரு தனியார் விமானத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 521 கிலோகிராம் மெத்தம்பெட்டமைன், மலேசியாவிலிருந்து வரவில்லை.

மாறாக பிலிப்பைன்ஸுக்குக் கடத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர், டத்தோ ஹுசைன் ஓமர் கான் இதனை உறுதிப்படுத்தினார்.

பிரத்யேகமாக வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்தத் தனியார் விமானம், சுபாங் விமான நிலையத்திலிருந்து லாவோஸின் லுவாங் பிரபாங்கிற்கு எந்தச் சரக்கும் இல்லாமல் புறப்பட்டது.

பின்னர் அங்கு போதைப்பொருள் விமானத்தில் ஏற்றப்பட்டதாக அவர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மலேசியாவிற்கானவை அல்ல, மாறாக பிலிப்பைன்ஸின் மணிலா சந்தைக்கானவை.

சம்பந்தப்பட்ட விமானம் எந்த சரக்கும் இல்லாமல் சுபாங் விமான நிலையத்திலிருந்து லுவாங் பிரபாங்கிற்குப் புறப்பட்டது. 

லாவோஸில் விமானம் வந்தடைந்த பின்னரே போதைப்பொருட்கள் ஏற்றப்பட்டன.

மேலும் அவை மணிலாவிற்கு கொண்டு செல்லப்பட இருந்தவை என்று நம்பப்படுகிறது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset