செய்திகள் மலேசியா
தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா அவர்களுக்காக தஹ்லீல் மஜ்லிஸ்
கோலாலம்பூர்:
முக் மின் (MUKMIN) அமைப்பின் ஏற்பாட்டில், மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல் ஆதரவில் 2026 அக்டோபர் 8, வியாழக்கிழமை அன்று பின்னேரம் (வெள்ளி இரவு) மக்ரிப் தொழுகைக்கு பிறகு கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் அல்லாஹ் யர்ஹமா துன் டாக்டர் சித்தி ஹஸ்மா அவர்களுக்காக யாசின், தஹ்லீல் ஃபாத்திஹா ஓத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ் யர்ஹமா துன் டாக்டர் சித்தி ஹஸ்மா அவர்களின் நினைவாகவும், தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையிலும், கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவுடன் இணைந்து இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்வதில் முக்மின் பெருமை கொள்வதாக அதன் நிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தஹ்லீல் மஜ்லிஸ்ஸில் கலந்துகொண்டு அவரது மறுமை வாழ்விற்காக பிரார்த்தனை செய்ய வருமாறு பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சி அக்டோபர் 8, வியாழக்கிழமை
மாலை 7:05 மணி, மஃக்ரிப் தொழுகையுடன் துவங்கும்.
7:30 மணிக்கு அன்னாரின் பெயரில் திருமறையின்
யாசின் அத்தியாயம் ஓதி அவருக்காக பிரார்த்திக்கப்படும்.
நிகழ்ச்சி 8:15 மணி அளவில் இஷா தொழுகையுடன் நிறைவு பெறும்.
துன் டாக்டர் மகாதீர் முஹம்மது அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் நாம் அனைவரும் கலந்துகொண்டு துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முஹம்மது அலி அவர்களுக்காக துஆ செய்ய வருமாறு அன்புடன் அழைப்பதாக முக்மின் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
புகைமூட்டம்: 38 பகுதிகளில் ஆரோக்கியமற்ற ஏபிஐ பதிவாகியுள்ளது
October 8, 2026, 2:55 pm
