நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்

சிரம்பான்:

மாநிலத்தில் நிலவும் புகைமூட்டச் சூழலைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலானில் உள்ள கல்வியமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் நாளை முதல் மூடப்படும்.

மாநிலத்தில் உள்ள மூன்று கண்காணிப்பு நிலையங்களில் பதிவான காற்று மாசுபாடு குறியீட்டு அளவீடுகளைக் கருத்தில் கொண்ட பிறகு, இன்றைய தேதியிட்ட கல்வியமைச்சின் ஊடக அறிக்கைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

போர்ட்டிக்சன், சிரம்பான், நீலாய் ஆகிய அந்த மூன்று நிலையங்களில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி ஏபிஐ அளவீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது நாட்டைத் தாக்கி வரும் புகைமூட்டச் சூழலைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் குறித்த அக்கறை, வழிகாட்டுதலுக்காக  மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக மாநில கல்வி இலாகா தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset